ஆதரவற்றவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்த பிரபல நடிகர் – மனதை இதமாக்கும் வீடியோ!

Author: Shree
30 May 2023, 10:40 am

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி, சாலைகளில் ஆதரவில்லாமல் வாழ்ந்து வந்த மக்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். ஏழையின் சிறிப்பில் இறைவனை காண வந்த விஜய் ஆண்டனிக்கு கோடி நன்றிகள். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • kantara 2 movie actor passed away while swimming in the river ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த காந்தாரா நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்…