ரூ. 200 கோடி சம்பளத்துக்காக கீழ்தரமா நடந்துக்கொண்ட விஜய்… வயித்தெரிச்சலோடு வாரி கொடுத்த தயாரிப்பாளர்!

Author: Shree
30 August 2023, 11:34 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்திய அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 விளையாட்டு அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.

இப்படித்தில் விஜய்க்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்க உள்ளதாக சமீபத்தி செய்தி வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டாராம். அவர் தற்போது நடித்துள்ள லியோ படத்திற்கே ரூ. 120 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அப்படி இருக்கும் போது ஏன் சம்பளத்தை குறைத்து கேட்கிறீர் என தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் கேட்டுள்ளது. அதற்கு அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்கிறேன். ஆனால், எனக்கு லாபத்தில் பங்குவேண்டும் என கேட்டாராம்.

இதை கேட்டதும் அதிர்ந்துபோன ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம்… ஐயோ அதெல்லாம் ஆகாது சாமி…. சம்பளம் என்னவோ அதை மட்டும் கேளுங்க என கேட்டதும் விஜய் ரூ. 200 கோடி கொடுங்கள் என்றாராம். இது பெரிய தொகையாக இருந்தாலும் லாபத்தில் பங்கு கொடுக்கமுடியாது என்பதால் ரூ. 200 கோடி தருவதாக ஒப்புக்கொண்டதாம். ரூ. 200 கோடி சம்பளம் வாங்க எப்படியெல்லாம் போட்டு வாங்கியிருக்காரு பாருங்க!

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!