பரதேசினு கூப்பிட்டு.. சேற்றை மூஞ்சில பூசி… விஷாலின் உண்மை முகத்தை வெளியிட்ட நடிகை..!

Author: Vignesh
30 August 2023, 11:45 am
vishal - updatenews360
Quick Share

மாமன்னன் படத்தில் நடித்த ரவீனா ரவி முன்னதாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார். இவர் சாட்டை, கத்தி, ஐ, வேலையில்லா பட்டதாரி, தெறி, போன்ற பல படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

raveena ravi-updatenews360

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

raveena ravi-updatenews360

அண்மையில், வெளியான மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா ரவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் YouTube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பல நடிகர்களுடன் இவர் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அது குறித்த சில வார்த்தைகளை பேச சொன்னார்கள்.

raveena ravi-updatenews360

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் வீரமே வாகை சூடும் இந்த படத்தில் டப்பிங் கலைஞராக ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமே வாகை சூடும் படப்பிடிப்பின் போது விஷால் என்னை பரதேசி என்று அழைப்பார். ஏன் அப்படி அழைத்தார் என தெரியவில்லை. ஆனால், அவர் என் மீது அதிக அக்கறை காட்டுவார் விளையாடுவார். ஆனால், அவரை போன்ற ஒருவரை இதுவரை என்னால் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Views: - 367

1

0