முதல் நாளே கோடிகளை குவித்த விஜய் சேதுபதியின் Merry Christmas!

Author: Rajesh
13 January 2024, 8:54 pm
merry christmas
Quick Share

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. இந்நிலையில் முதல் நாளே இத்திரைப்படம் உலக அளவில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மிகப்பெரிய வசூல் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

Views: - 397

0

0