இவங்க தான் பாரதி கண்ணம்மா-2 ஹீரோ ஹீரோயினா..? வெளியான அதிகாரபூர்வ ப்ரோமோ..!

Author: Rajesh
4 February 2023, 11:29 am

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

bharathikannammaserial_updatenews360

மலையாள தொடரான கருத்தம்மா தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஓடியது. இந்த சீரியலில் முதன் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டும் இயக்குனரை சாடியும் வந்தனர். 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒருவழியாகமுடிவுக்கு வர உள்ளதை சீரியல் குழு உறுதி கடந்த வாரம் அறிவித்தது.

bharathi kannamma-updatenews360

இந்நிலையில், புதிய கதைகளத்துடன் ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் உருவாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த 2ம் பாகத்தில் சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் நடித்து வந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிப்பதாகவும், வினுஷா தேவி மீண்டும் கண்ணம்மாவாக நடிப்பதாகவும் அதில் தெரிகிறது. மேலும், கதை முற்றிலும் முதல் பாகத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பது போல தெரிகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!