இப்படியா நடக்கணும்.. ‘வாரிசு’ படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக்..! ஷாக்கான படக்குழு..!

Author: Vignesh
18 October 2022, 9:06 am

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் குடும்ப செண்டிமெண்ட் கொண்ட கதையம்சத்தில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்தது.

மேலும் இப்படத்தில் விஜய்யை சற்று வித்யாசமாக காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வர ரசிகர்கள் வாரிசு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பார்த்த விஜய்யை வாரிசு படத்தில் பார்க்கலாம் எனவும் சில ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது எண்ணுரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சமயத்தில் இப்படத்திலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

vijayvarisu-updatenews360

கடந்த சில மாதங்களாகவே வாரிசு படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வந்தன. இதையடுத்து இயக்குனர் வம்சி பல கட்டுப்பாடுகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோல வாரிசு படப்பிடிப்பில் இருந்து வீடீயோ கசிவதால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

விரைவில் வெளியாவதாக இருந்த வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. ரஞ்சிதமே எனும் ஒலிக்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளாராம்.

எற்கனவே வாரிசு படத்தில் இருந்து பல காட்சிகள் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?