அப்பா இறப்பதற்கு 2 நாள் முன்… மேடையில் கதறி அழுத விஜய பிரபாகரன்!

Author: Rajesh
20 January 2024, 6:09 pm

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர்களை தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் அவர் விருப்பத்தின் படியே மக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கண்ணீர் விட்டு பேசியது அனைவரது கண்களையும் குளமாக்கியது.

ஆம், அப்பா விஜயகாந்தின் பல நற்பண்புகள் குறித்து பேசிய அவர் மிகவும் எமோஷனல் ஆகி கதறி அழுதார்.அவர் கூறியதாவது, கடந்த 10 வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் தான் இருந்தார். அந்த நிலையிலும் அவரின் இலட்சியங்களை விடவில்லை. எனவே குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் .கடைசி வரை 71 வயசு வரைக்குமே அவர் கஷ்டப்பட்டு இருக்கிறார். சில ஊடகங்கள் அவரை பற்றி தவறாக செய்திகள் பரப்புகிறது.

அதில் துளி கூட உண்மையில்லை. அப்பாவுக்கு கடைசி வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருந்துச்சு. எல்லாரையுமே அவர் ஞாபகம் வைத்திருந்தார். உதாரணத்திற்கு, 2 இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்க வீட்ல வேலை செய்யும் குமார் அண்ணன், சோமு அண்ணன் என ரெண்டு பேரையும் அழைத்து அவருடைய பட பாடல்கள் எல்லாத்தையும் போட்டு கொடுக்க சொல்லி தாளம் போட்டு ரசிச்சிருக்காரு. அவங்க சொல்லி அதை நாங்க சிசி டிவி காட்சியில் பார்த்து அழுதோம் என கண்கலங்கி கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!