விஜயகாந்த் உடலை வட்டமடித்த கருடன்….கதறி அழுத ஆயிரக்கணக்கான மக்கள் – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Author: Rajesh
30 December 2023, 12:36 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டுச்செல்லும் பொது அவரது பூத உடலை சுற்றி கருடன் வட்டமடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

vijayakanth-updatenews360

இறந்த ஒருவரின் உடலை சுற்றி கருடன் வட்டமடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மனித கடவுளுக்கு தான் இதுபோன்று நடக்கும். ஆம், நல்ல மனிதர்கள் மறைந்து வர்கள் இறுதி யாத்திரை செல்லும் போது கருடன் வட்டமடித்து செல்வது மிகவும் சிறப்பான நல்ல சகுனம். கலியுக கர்ணன் கேப்டனை சொர்க்கத்திற்கு கடவுள் வரவேற்ற தருணத்தின் சாட்சி தான் இந்த கருடன். இதை பார்த்து விஜயகாந்தின் மகன்கள் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுதனர். மேலும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அழுத காட்சி இதோ:

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!