உனக்கு அப்பாவே வேண்டாம் நான் இருக்கேன்… ஆசைப்பட்ட மனுக்காக துணிந்து அதை செய்த விஜய் மனைவி!

Author: Shree
23 October 2023, 3:10 pm

சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள், கேலி , கிண்டல் என பல சிக்கல் வரும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களுக்கு தான் நல்லவர் என்பதை படத்தின் மூலமாகவும், நேரடியாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்தால் தான் இந்த துறையில் நிலைத்து இருக்கமுடியும்.

அப்படிதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் என்ன பெரிய சிக்கல்கள், பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாமல் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி மக்களை கவர்ந்து வைத்திருந்தவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.

இப்படியான நேரத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக லைகா நிறுவனத்தில் இணைந்துள்ளார். மகன் இயக்குனராக முக்கிய காரணமே விஜய்யின் மனைவி சங்கீதா தான். அவர் தான் மகனின் ஆசையை நிறைவேற்ற லண்டனில் தொழிலதிபராக இருக்கும் தனது தந்தை மூலம் சிபாரிசு செய்து மகனுக்கு லைகா நிறுவனித்திடம் வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் விஜய்க்கும் விஜய் மகன் இயக்குனராக அறிமுகமாவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!