கௌதமியுடன் 25 வருடம் நெருக்கமாக இருந்த நபர்… சொத்துக்களை ஆட்டையை போட்டு எஸ்கேப்!!!
Author: Vignesh23 October 2023, 3:37 pm
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்ற பெயரோடு கொடிக் கட்டி பறந்து வருபவர் கமல்ஹாசன். பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். சர்ச்சைகளை தாண்டி திரையுலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
2 முறை நடிககைகளை திருமணம் செய்து தோல்வி கண்ட கமல், அவர்களை பிரிந்த பின் பல நடிகைகளுடன் சர்ச்சைகளில் சிக்கினார்.
அவருடன் 13 வருடம் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த நடிகை கவுதமி. தேர்வமகன் நம்மவர் உள்ளிட்ட படங்களில் நடித்த பின் சில காலம் ஒரே வீட்டில் வசித்தனர்.
அப்போது விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் பிஸியாக நடித்த போது கமல் ஹாசனை பிரிவதாக கெளதமி பேட்டிக்கொடுத்து அறிவித்தார். தன் மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காத் தான் பிரிகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். பாபநாசம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
கடந்த 25 ஆண்டுகளாக பிரபல கட்சியில் உறுப்பினராக இருந்து வந்த கௌதமி தற்போது அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிமையில் இருந்து வந்த கௌதமிக்கு அழகப்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரையும், அவரின் குடும்பத்தையும் நம்பி கௌதமி தன்னுடைய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
சுமார் 25 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கும் பொறுப்பை அழகப்பனிடம் கொடுத்தபோது அவரது மனைவியின் பெயரையும் சேர்த்து எழுதி மோசடி செய்திருக்கிறார். 40 நாட்களாக இதை அறிந்து புகார் அளித்ததில் இருந்து அழகப்பன் 40 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தற்போது, அழகப்பனுக்கு தான் அனைவரும் சப்போர்ட் செய்து வருவதாகவும், இதனால் தான் மன உளைச்சல் அடைந்தால், தான் கட்சியிலிருந்து விலகியதாகவும், கூறி முதலமைச்சர் மு க ஸ்டாலினை நம்பியிருப்பதாகவும் கௌதமி தெரிவித்து இருக்கிறார்.