சாராயம் காய்ச்சும் வியாபாரியாக விக்ரம்.. ட்ரெய்லரால் எகிறும் மகான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு..!

Author: Rajesh
3 February 2022, 1:53 pm

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பாப்பை எகிறவைத்துள்ளது. மது ஒழிப்புப் போராளி ஆடுகளம் நரேன் தனது மகனான விக்ரமையும் மது ஒழிப்பை கையிலெடுத்து பெரிய மகான் ஆகச்சொல்கிறார்.

ஆனால், சூழ்நிலைகளால் ஆசிரியாக இருக்கும் விக்ரம் சாராயம் காய்ச்சி விற்கும் தொழில் செய்கிறார். அதற்கு ஏற்றது போல ஒரு வசனம் வரும்.. ‘மது ஒழிப்புப் போராளியோட மகன் ஊருக்கெல்லாம் சாராயம் காய்ச்சிட்டிருக்க’ ‘சரக்கு சாம்ராஜ்யத்தின் மகாராஜா எங்கப்பன்’ என்கிறார் துருவ் விக்ரம். ஆசிரியர் ப்ளஸ் அடாவடி சாராயம் காய்ச்சும் வியாபாரியாக கவனம் ஈர்க்கிறார் விக்ரம். அவரைவிட துருவ் விக்ரமும் ஃபிட்டான உடலமைப்புடன் புருவம் உயர்த்த வைக்கிறார். இவர்கள் இருவரை விடவும் வித்தியாசமான கெட்டப்பில் பாபி சிம்ஹா மிரட்டல் தருகிறார்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!