விபின் குமார் எனது மேனேஜரே கிடையாது- உன்னி முகுந்தன் கொடுத்த அதிர்ச்சி! வழக்கில் ஒரு டிவிஸ்ட்…

Author: Prasad
28 May 2025, 12:37 pm

மேலாளரை தாக்கிய உன்னி முகுந்தன்

மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவரது மேலாளரான விபின் குமார், டொவினோ தாமஸ் நடித்த “நரிவேட்டா” திரைப்படத்தை தான் புகழ்ந்ததற்காக நடிகர் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உன்னி முகுந்தன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

vipin kumar is not my manager said by unni mukundan

அவர் எனது மேலாளரே இல்லை..

விபின் குமாரை தனது தனிப்பட்ட மேலாளராகவே நியமிக்கவில்லை என உன்னி முகுந்தன் விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த விளக்கத்தில், “2018 ஆம் ஆண்டு நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க தயாராகிக்கொண்டிருந்தபோது விபின் குமார் என்னை தொடர்புகொண்டு பல பிரபலங்களின் பி ஆர் ஓ ஆக தான் பணியாற்றியுள்ளதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பின் இந்த நபரால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. 

vipin kumar is not my manager said by unni mukundan

ஒரு சக ஊழியராகவும் நண்பராகவும் விபின் மிக மோசமான மன்னிக்க முடியாத செயலைச் செய்தார். இந்த நபர் மீது நான் எந்தவிதமான தாக்குதலையும் நான் நடத்தவில்லை. இந்த நபர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. 

விபின் ஒரு நடிகையிடம் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார். இந்த விவகாரம் எனக்கும் விபினுக்கும் இடையே சண்டைக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், என்னை அவதூறு செய்து என்னுடைய நற்பெயரை அழிப்பேன் என்று விபின் குமார் என்னை மிரட்டினார். என்னுடைய தொழில் வாழ்க்கையை அழிக்க ஒரு சிலர் இந்த நபருக்கு உதவுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • rajesh passed away before seeing his son marriage கனவு நிறைவேறப்போகும் தருணத்தில் பிரிந்த உயிர்? ராஜேஷ் மகனுக்கு நடக்கவிருந்த சுப நிகழ்ச்சி! ஆனால் கடைசில?
  • Leave a Reply