என்ன சோனாமுத்தா; போச்சா?- கூலியிடம் பலத்த அடி வாங்கிய வார் 2 படத்தின் பரிதாபகரமான நிலை?
Author: Prasad16 August 2025, 5:29 pm
கூலியுடன் போட்டி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இத்திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் ஆகியோரின் நடிப்பில் உருவான “வார் 2” திரைப்படம் “கூலி” திரைப்படத்திற்கு போட்டியாக வெளியானது. “வார் 2” திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இது YRF Spy Universe-ல் வரும் திரைப்படமாகும். இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பரிதாபகரமான வசூல்?

அதாவது “வார் 2” திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.175 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி ஆகும். இந்த நிலையில் இத்திரைப்படம் “கூலி” திரைப்படத்துடன் போட்ட நிலையில் தற்போது வரை ரூ.175 கோடியே வசூல் செய்துள்ளது. இதன் மூலம் உலகளவில் “கூலி” திரைப்படம் பந்தயம் அடித்துள்ளது.
