மங்காத்தா 2வை பற்றி பேசினாலே எரிச்சலடையும் அஜித்.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த வைபவ்..!

Author: Vignesh
23 February 2024, 2:49 pm
mankatha
Quick Share

நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த படத்தில் அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற பேச்சும் அடிபட்டு கொண்டுதான் இருக்கிறது. முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் வில்லனாக செம மாஸ் காட்டி நடித்த படம் மங்காத்தா.

mankatha

அதாவது, ஒரு சமயத்தில் அஜித்தின் ஏகன், அசல் போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்து கொண்டிருந்த நேரத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அஜித்தை அவருடைய ரசிகர்கள் மங்காத்தா படத்தில் வில்லனாக பார்த்த வித்தியாசமான அனுபவத்தை பெற்றனர்.

mankatha

இதனால், அப்போதிலிருந்து மங்காத்தா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இதுவரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மங்காத்தா 2 படத்தைப் பற்றி பேசினாலே அஜித் எரிச்சல் அடைகிறார். எல்லாத்திற்கும் காரணம் வெங்கட் பிரபு தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது, மங்காத்தா அஜித்திற்கு ஒரு டர்னிங் பாயிண்டு கொடுத்த படம் என்று சொல்லலாம். அதன்பின் ரசிகர்கள் மங்காத்தா 2வை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

mankatha

2011 இல் வெளிவந்த மங்காத்தா கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகியும் இரண்டாம் பாகம் கனவாக தான் இருந்து வருகிறது. இதற்கு காரணம், அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தான் என்று கூறப்படுகிறது. அதாவது, நான் அஜித் விஜயை சேர்த்து வைத்து ஒரு படத்தை எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இவர் இந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தது அஜித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

mankatha

இதற்கு அஜித் ஒத்துக் கொள்ளாத போதே வெங்கட் பிரபு இவ்வளவு ஆட்டம் போடுகிறார் என்றால், அவர் ஒத்துக் கொண்டால் எந்த அளவிற்கு ஆடுவார் என்றும், மங்காத்தா 2 படத்தை பற்றி பேசும்போது எல்லாம் அஜித் அதை தட்டிக் கழித்து வருகிறாராம். எப்போது, வெங்கட் பிரபுவுக்கு விஜயை தன்னுடன் சேர்த்து வைத்து படம் பண்ண வேண்டிய ஆசை வந்துச்சோ அப்போதே மங்காத்தா 2வை அஜித் கைவிட்டு விட்டார்.

mankatha

எல்லாத்துக்கும் வெங்கட் பிரபுவின் வாய்தான் காரணம் என்றும், அஜித் நினைத்தால் மட்டுமே, மங்காத்தா 2 படத்திற்கு ஒரு முடிவு காலம் கிடைக்கும். ஆனால், வெங்கட் பிரபுவின் 14 வருடத்திற்கு கிடைத்த தவமாக விஜய்யின் தளபதி 68 படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுத்தால் அஜித் மங்காத்தா 2 படத்தை இயக்குவதற்கு மனம் இறங்கி ஒத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

mankatha

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் வைபவ், மங்காத்தா 2 படம் பற்றி அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் கேட்பேன். ஆனால், அஜித் சார் தரப்பில் இருந்து வெங்கட் பிரபுவிற்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை, அதனால் அப்படியே இருக்கிறார் வெங்கட் பிரபு என வைபவ் கூறியுள்ளார்.

vaibhav
Views: - 139

0

0