நீ என் மனைவி மாதிரி… பிக்பாஸ் ஜனனியை பார்த்து இப்படி சொல்லிட்டாரே விஜய்!

Author: Shree
3 November 2023, 10:06 am
bigg boss janani
Quick Share

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. திரைஇப்படம் படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் விமர்சனத்தில் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை. உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும். சுமார் 461 கோடி வசூலை 7 நாட்களில் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல முன்னணி நடிகைகளே விஜய்யுடன் நடிப்பதை கனவாக நினைத்திருக்கும் இந்த நேரத்தில் திரைத்துறை அனுபவமே இல்லாத பிக்பாஸ் ஜனனி விஜய் உடன் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்து தனது திரைப்பயணத்தை அழுத்தமாக துவங்கியுள்ளார். அண்மையில் அவர் லியோ படத்தின் ஷூட்டிங்கில் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, விஜய் ஜனனியை பார்த்ததும் அவர் இலங்கை தமிழ் பெண் என்பதால் தன்னுடைய இலங்கை ரசிகர்கள் குறித்து கேட்டறிந்தாராம். அது மட்டும் அல்லாமல் என் மனைவியும் உங்களை போல் ஒரு இலங்கை தமிழ் பெண் தான். உங்களுடன் பேசும்போது என் மனைவி பேசுவது போல் உள்ளது என கூறினாராம். இதன் மூலம் விஜய் தன் மனைவியை எந்த அளவிற்கு மிஸ் செய்கிறார் என்பது தெரிகிறது.

Views: - 325

0

0