அது வேற வாய்.. விஜய்யே வந்து சொன்னா மீசையை எடுக்கிறேன்.. மீசை ராஜேந்திரன் அந்தர் பல்டி..!

Author: Vignesh
21 அக்டோபர் 2023, 3:36 மணி
Vijay - Updatenews360
Quick Share

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துது. இதுவரை இப்படம் சுமார் 600 கோடிக்கும் அதிமான வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் வசூலை அடுத்ததாக வெளியாகப்போகும் விஜய்யின் லியோ பீட் செய்யவே முடியாது என பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் அடித்து கூறியுள்ளார்.

லியோ வசூலும் ஜெயிலர் படத்தை போன்று வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது என ஆங்கர் கூற ஆதங்கத்தில் மீசை ராஜேந்திரன்… அப்படியெல்லாம் இல்லை சார். ஜெயிலர் படத்தை நெருங்க கூட முடியாது லியோ… அப்படி நடந்துவிட்டால் நான் என் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விட்டு இருந்தார்.

தற்போது, உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEO Review- Updatenews360

லியோவின் முதல் நாள் வசூலை பார்த்து மீசையை எடுக்க முடியாது என்று மீசை ராஜேந்திரன் அந்தர் பல்டி அடித்துள்ளார். என் படம் 800 கோடி வசூலைத் தாண்டியது என்று விஜய் சார் சொல்லட்டும், அப்போது மீசையை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • வாய்ப்பில்ல ராஜா.. வாத்தியார் தவறு செய்ய மாட்டார்.. அடித்துச் சொல்லும் சீமான்
  • Views: - 448

    0

    0