அந்த ஒரு பாட்டை வெச்சு தான் படமே ஓடுச்சு.. தமன்னா குத்தாட்டத்தை கலாய்த்த மன்சூர் அலிகான்..!

Author: Vignesh
21 அக்டோபர் 2023, 4:15 மணி
mansoor ali khan -updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான் ஜெயிலர் படத்தை பற்றி மிகவும் மோசமான விமர்சனத்தை வைத்துள்ளார். ஏற்கனவே பட விழா ஒன்றில் பேசியபோது, படம் ஓரளவுக்கு தான் இருக்கு, அனிருத்தின் இசைதான் படத்தை தூக்கியது என்று கூறியிருந்தார்.

kavalaya song-updatenews360

தற்போது காவலா பாட்டை எப்படி அனுமதிச்சாங்க வரிகளே வா வா ராத்திரிக்கு ரா ரானு இருக்கு மோசமான மூமென்ட் அதை மட்டும் காண்பித்தார்களா இல்லை? அந்த ஒரு பாட்டை வைத்து தான் படமே ஒடிச்சு என்றும், மத்தபடி ஒரு வெங்காயமும் அந்த படத்தில் இல்லை என்று தற்போது பேசியிருக்கிறார். மேலும், என்னால் இதை பண்ண முடியாதா? தமன்னா இல்லன்னா ஒரு கமன்னாவை வைத்து 10 லட்சம் கொடுத்து ஆட வைக்க முடியாதா? பெரிய ஆள் வயசாகி நடிச்ச அதை அனுமதிப்பாங்க நானும் கவர்ச்சியாக எடுக்கவா? என்று படுமோசமாக கலாய்ந்து பேசி இருக்கிறார்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 313

    0

    1