பொண்ணு மாப்பிள ஜோரு… You tuber இர்ஃபானுக்கு திருமணம் முடிந்தது – ஜோடி பொருத்தம் சூப்பரு!
Author: Shree14 May 2023, 6:21 pm
கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் நடத்தி பெரிய ஸ்டார் நடிகர்கள் ரேஞ்சுக்கு சாதாரண மக்கள் கூட பிரபலமாகிவிட்டனர். அந்தவகையில் பிரபல யூடியூப்பரான இர்ஃபான் சாப்பிட்டு vlogger மற்றும் ரிவ்யூ செய்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் பல்வேறு திரை நட்சத்திரங்களை வைத்து food review கொடுப்பார். இவரது யூடியூப் சேனலை 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் யூடியூப் வீடியோவில் உள்ளூர் உணவு முதல் வெளிநாட்டு உணவுகள் வரை பொளந்து காட்டுவார்.
இந்நிலையில் இவருக்கு இன்று மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ஜோடி பொருத்தம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வாழ்த்தி வருகிறார்கள்.
0
0