கமல்ஹாசனுடன் காதல்? தப்பு தப்பா பேசாதீங்க- திடீரென கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…

Author: Prasad
31 July 2025, 2:03 pm

கமல்ஹாசனை காதலித்தேன்?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியின் “குக் வித் கோமாளி சீசன் 6” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ரஜினி, கமல், விஜய், சிம்பு போன்ற பல நடிகர்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் எந்தெந்த போட்டியாளர்கள் எந்நெந்த நடிகர்களுக்கு மாலை போட்டு தேர்ந்தெடுத்தார்களோ அந்தந்த நடிகர்களின் வேடம் அணிந்த கோமாளிகள் அவர்களுக்கு Pair ஆக வந்தார்கள். 

Lakshmi Ramakrishnan give explanation about love on kamal haasan

அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன், “கமல்ஹாசனை நான் காதலித்தேன். ஒரு முறை அவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் அதனை சொல்ல முற்பட்டபோது திடீரென அவர் என்னை தங்கை போல் இருப்பதாக கூறிவிட்டார்” என்று ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். இதனை தொடர்ந்து இணையத்தில் பலரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியதை வைரல் ஆக்கி வந்தனர். 

இது நியாயமற்றது?

இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் 16 ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18 ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42 ஆவது வயது வரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர் போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தை போன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான்.

45 ஆவது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது உண்மையிலேயே star struck ஆகிவிட்டேன். அவர் என்னை பார்த்து ‘எனது சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக்கு வித் கோமாளியில் நன்றாக ரசித்து பகிர்ந்தேன். இதை தவறாக புரிந்து செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும் கூட” என்று பகிர்ந்துகொண்டுள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!