அமரன் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்.. இயக்குனரிடம் விஜய் ஏக்கம்!

Author: Hariharasudhan
29 November 2024, 1:10 pm

அமரன் படத்தைப் பார்த்த பின்பு, விஜய் கூறியது என்ன என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மனம் திறந்து பேசி உள்ளார்.

சென்னை: இயக்குனர் ராஜ்குமார் பெரியாசாமி, சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்தார். இந்த நிலையில், இது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார். அதில் பேசிய அவர், “அமரன் படம் கொஞ்சம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறாக இருக்கிறது.

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது அமரன் படத்தைப் பற்றி, அதான் உலகமே சொல்கிறதே.. உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என விஜய் கூறியதாகக் கூறினார். இந்தச் சந்திப்பின் போது, விஜய் – ராஜ்குமார் பெரியசாமி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினைப் பார்த்து ரசித்துள்ளனர்.

தொடர்ந்து, இருவரும் சேர்ந்து புதிதான புகைப்படம் ஒன்றையும் எடுத்து உள்ளனர். இந்த சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதனால் மிகவும் பெருமைக்குரிய மனிதராக மாறியதாகவும் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி பொங்க நேர்காணலில் பேசியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Rajkumar Periasamy with Vijay old photo

இந்த பாராட்டிற்கெல்லாம் காரணம், கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவரைப் பெற்ற அமரன் படம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.

இதையும் படிங்க: தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் வெளியான இப்படம், இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிப்பதாக எதிர்ப்புகள், திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களையும் சந்தித்தது. இதனிடையே, சென்னை ராணுவப் பயிற்சி மையம் சார்பில் சிவகார்த்திகேயன் கெளரவிக்கப்பட்டார்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…