விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிபடுத்திய புகைப்படம்? இப்படி பச்சையா மாட்டிக்கிட்டீங்களே!

Author: Prasad
29 May 2025, 3:19 pm

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதல்?

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவும்  தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும்  காதலித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன. இருவரும் இணைந்து ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. எனினும் இவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக இன்னும் வெளியே தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றே பல தகவல்கள் வெளிவருகின்றன. 

rashmika mandanna photos ensure fans that she is in relationship with vijay deverakonda

உறுதிபடுத்திய புகைப்படம்

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டா வீட்டில் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதாவது தற்போது ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும் இதற்கு முன் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படத்தில் இடம்பெற்ற இடமும் ஒரே இடம்தான் என கூறுகின்றனர். அப்புகைப்படங்களில் அவர்களின் பின்னணியில் தென்படுவை ஒரே மாதிரியான பின்னணிதான் என அடித்து கூறுகின்றனர் நெட்டிசன்கள். 

rashmika mandanna photos ensure fans that she is in relationship with vijay deverakonda

ஆதலால் விஜய் தேவரகொண்டா வீட்டில்தான் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் மூலம் இவர் இருவரும் நிச்சயம் காதலித்து வருகின்றனர் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!