கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா…. விஷயமே அங்க தான் இருக்கு!

Author:
18 September 2024, 10:03 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

nayanthara

தமிழ், தெலுங்கு. தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,

விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தில் சினேகா ரோலில் முன்னதாக நடிக்க இருந்தது நடிகை நயன்தாரா தான். ஆனால், சினேகா ரோலில் முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை நடிகை ஜோதிகா தானாம். ஆனால், ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க சூர்யா தரப்பு சம்மதம் தெரிவிக்காதால் ஜோதிகா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

goat

அதன் பிறகு இந்த படத்தின் கதை நயன்தாராவிடம் சென்று இருக்கிறது. ஆனால் நயன்தாராவும் கோட் படத்தின் கதையை பொறுமையாக கேட்டுவிட்டு தான் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்: 100% உண்மையாக இருந்தேன் – குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை – சமந்தா கறார்!

GOAT Movie Poster

காரணம் முன்னாள் காதலரான பிரபுதேவா இத்திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா அவருடன் ஆன சில காட்சிகளும் தனக்கு இருக்கும் என்பதை அறிந்து கொண்டு அவருடன் நடிப்பது சரிவராது என முடிவு செய்த அந்த படத்தில் நடிக்கவே மறுத்து விட்டாராம்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் இந்த முடிவு மிகச் சரியானதே. என்ன தான் எக்ஸ் காதலனாக இருந்தாலும் அவருடன் சேர்ந்து நடிக்க கூட நயன்தாரா மறுத்துள்ள இந்த எண்ணம் உயர்ந்த எண்ணமாக பார்க்கப்படுகிறது என கூறியுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!