ரஜினிகிட்ட கேட்காதீங்க…. அவருக்கு ஒரு மண்ணும் தெரியாது – சூப்பர் ஸ்டார் குடும்பத்தையே வம்பிழுத்த விசித்திரா!

Author:
5 September 2024, 12:04 pm

கடந்த சில நாட்களாகவே சினமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. பெண்கள், நடிகைகள் பல பேரும் தங்களுக்கு நேர்ந்த பாலில் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக வந்து பொதுவெளியில் கருத்து கூறி வருகிறார்கள்.

hema committee

இந்த நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் பிரபலமும் பிரபல நடிகையுமான விசித்ரா பேட்டி ஒன்றில் மனம் திறந்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது எந்த ஒரு நடிகர்களும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேச முன் வருவதே கிடையாது. அப்படி இருக்கும் போது மீடியாக்கள் ஏன் அவர்களிடமே சென்று இது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

actress vichithra

இது பற்றி நடிகர்களிடம் கேட்காமல் அதற்கு மாறாக அவர்களின் மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் கேளுங்கள். அப்படித்தான் ரஜினியிடம் மீடியாக்கள் சென்று ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவரோ எனக்கு ஒன்றும் தெரியாது என்று என கூறிவிட்டு செல்கிறார்.

rajinikanth

எனவே அவரது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவிடம் சென்று இந்த கேள்வியை கேட்க வேண்டும். ரஜினிகாந்த் இப்போது தன்னுடைய படம் நல்லபடியா ரிலீஸ் ஆகவேண்டும் என்ற ஒரு பெரிய டென்ஷனில் இருக்கும்போது இதைப்பற்றிய எல்லாம் உண்மையும் அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட அவர் வாய் திறக்காமல் தான் செல்வார் என நடிகை விசித்ரா சூப்பர் ஸ்டார் குடும்பத்தையே ஹேமா கமிட்டி சர்ச்சைக்குள் இழுத்து விட்டு இருக்கிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!