கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் விஜே மணிமேகலை. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கெரியரை தொடங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை அதே சேனலில் தொகுத்து வழங்கி வந்தார்.
இதனிடையே சில காலம் பிரேக் விட்டிருந்த அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருந்து வந்த நிலையில் பின்னர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு கிராம மக்களுடன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ரீச் ஆனதை தொடர்ந்து அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைக்க ஆரம்பித்தது .
குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான cwc நிகழ்ச்சியில் கோமாளியாக முதல் சீசனில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மணிமேகலையின் பெர்ஃபார்மன்ஸ் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட அவர் பிரபலமான கோவமாளியாக வலம் வரத் தொடங்கினார். அதை அடுத்து அதே நிகழ்ச்சி 5-வது சீசனில் அவர் தொகுப்பாளனியாக தனது வேலையை செய்து கலக்கி வந்தார் மணிமேகலை.
இதனிடையே அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அந்த நிகழ்ச்சியில் விட்டு பாதியிலே வெளியேறினார். இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பிஜே பிரியங்காவின் மோசமான நடவடிக்கைகள் தான். மணிமேகலையை வேலை செய்ய விடாமல் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தது, சேனலில் பாலிடிக்ஸ் செய்து வந்ததன் மூலமாக மணிமேகலை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இப்படியான நேரத்தில் விஜே மணிமேகலை குறித்தும் அவரது நல்ல குணங்களை பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மணிமேகலை பழைய சீசன் ஒன்றில் வெங்கடேஸ் பட் மற்றும் தாமு இருவரும் இணைந்து மணிமேகலைக்கு விருது வழங்கி வாழ்த்தும்போது மணிமேகலை மிகவும் எமோஷனலாகி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: அதுப்பில் ஆடாதே… DD- போட்ட பிச்சை தான் உனக்கு – பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
அப்போது நான் முதல் சீசனில் கோமாளியாக பங்கேற்ற போது என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் எனக்கே சில நேரங்களில் பிடிக்காது. எல்லாருமே நல்லா செமயா பண்றாங்க எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று என் கணவர் உசைனிடம் சென்று பலமுறை நான் கூறி அழுது இருக்கிறேன்.
தொகுப்பாளினியாக எனது வாழ்க்கையை நகர்த்தி வந்த நான் இந்த குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என பழைய எபிசோடில் மிகுந்த வேதனையோடு பேசி இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Manimegalai emotional speech 🥹#PriyankaDeshpande#Cookwithcomali5pic.twitter.com/vFsJuyHczc
— 𝐱𝐒𝐡𝐚 (@sha_tweetz) September 16, 2024
0
0