கடந்த இரண்டு நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்துக் கொண்டு ஆங்கரிங் செய்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜே மணிமேகலை.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இதனிடையே அதே cwc நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.
ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .
இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து இதுதான் அவரது உண்மையான குணம் என வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள் .
இதையும் படியுங்கள்: ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து செய்தது ஏன்? – ரகசியத்தை கூறிய ஏ.ஆர். ரெய்ஹானா!
மேலும், நெட்டிசன்ஸ் சிலர் விஜே மணிமேகலை தங்கமான மனசு கொண்டவர். அவரைப்போய் இப்படி பேசி துன்புறுத்தியிருக்கிறார் இந்த பிரியங்கா என அவரை திட்டி தீர்த்து வருவதோடு டிடி போட்ட பிச்சையில் தான் ஆங்கரிங் வாய்ப்பே உனக்கு கிடைத்தது.
எனவே அதை ஒழுங்காக காப்பாற்றிக் கொள்வதை விட்டு அடுத்தவர்களை மன நோக பேசி அடுத்தவர்களின் பிழைப்பில் மண்ணள்ளி போட பார்த்தால் உன்னுடைய பிழைப்பு தான் நாறிப் போய்விடும் என அவரை கடுமையாக விமர்சித்து எச்சரித்து வருகிறார்கள்.
0
0