பார்க்கும்போதே எச்சில் ஊறுதே… சுவையான அரிசி பாயாசம்!!!

Author: Hemalatha Ramkumar
5 November 2024, 7:08 pm

பொதுவாக நாம் பாசிப்பருப்பு மற்றும் சேமியாவில் பாயாசம் செய்வது வழக்கம். ஆனால் பாஸ்மதி அரிசியில் ஒரு முறையாவது நீங்கள் பாயாசம் செய்து பார்க்க வேண்டும். ஒரு முறை செய்துவிட்டால் நிச்சயமாக இந்த ரெசிபியை அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழ்வீர்கள். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். இந்த பாயசத்தில் நாம் பால் மற்றும் அனைத்து விதமான நட்ஸ் வகைகளை சேர்த்து செய்யப் போவதால் இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பசியோடு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு இந்த பாயாசத்தை நீங்கள் செய்து கொடுக்கலாம். 

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர் 

பாஸ்மதி அரிசி – 100 கிராம்

நெய் – 3 டேபிள் ஸ்பூன் 

பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் 

இடித்த வெல்லம் – 1 கப் 

முந்திரி பருப்பு  

பாதாம் பருப்பு  

பிஸ்தா பருப்பு 

உலர்ந்த திராட்சை

ஏலக்காய் – 3 

பிரியாணி இலை – 2

செய்முறை

*அரிசி பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 100 கிராம் அளவு பாஸ்மதி அரிசியை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். 

*அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி  மிதமான தீயில் 30 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். 

இதையும் படிக்கலாமே: இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோமா..???

*பால் கொதித்துக் கொண்டிருக்கும் பொழுதே பால் பவுடரில் 2 டீஸ்பூன் அளவு பால் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 

*30 நிமிடங்கள் கழித்து நாம் கலந்து வைத்துள்ள பாஸ்மதி அரிசி மற்றும் நெய் கலவையை பாலில் சேர்த்து கிளறவும். 

*தொடர்ந்து கைவிடாமல்  கிளறி கொண்டே இருக்கவும். இந்த சமயத்தில் 2 பிரியாணி இலைகளை  சேர்த்துக் கொள்ளலாம். 

*இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும். 

*பாஸ்மதி அரிசி நன்றாக வெந்து வரும் பொழுது நாம் ஏற்கனவே செய்து வைத்த பால் பவுடர் கலவையை சேர்க்கவும். 

*மேலும் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறவும். 

*இப்போது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, உலர்ந்த திராட்சைகள் ஆகிய நட்ஸ் வகைகளை 2 டீஸ்பூன் நெய்யில் வதக்கி சேர்த்துக் கொள்ளலாம். 

*அவ்வளவுதான் கிரீமியான அரிசி பாயாசம் தயார். 

*இதனை நீங்கள் சூடாக சாப்பிடலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த நிலையிலும் சாப்பிடலாம்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 378

    0

    0