உடலுக்கு நீங்கள் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான 10 இயற்கை உணவுகள் இதோ!

26 March 2020, 5:46 pm
nature foods updatenews360
Quick Share

இன்றைய   இளைஞர்களின்   பலரும் தங்களை   அழகாகவும், கட்டுக்கோப்புடனும்  வைத்துக் கொள்ள வேண்டும் என   நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள்  ஜிம்முக்கு சென்று அதிகம் செலவிடுவார்கள். ஆனால்  உணவில் கோட்டை விட்டு விடுவார்கள். சிலரால் சரியான முறையில்  உணவு டயட்டை பாலோ செய்ய முடியாது. நொறுக்குத் தீனிகள் மற்றும்   பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால், அவர்களுக்கு உடலில் பல விதமான   சிக்கல்கள் மற்றும் வியாதிகள் ஏற்படுகிறது. உங்கள் உடல் கட்டுப்பாடாகவும், அழகாகவும்  இருக்க வேண்டுமென்றால், நீங்கள் இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய உணவுகளை உண்பது அவசியமாகும். அதற்காக   உணவுகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது, அதைப்பற்றி இங்கு காண்போம்.

nature foods updatenews360

இறைச்சி:

 கோழி   இறைச்சியானது  செல்களின் தேய்மானத்தைக் குறைத்து  விடும். அதுமட்டுமில்லாமல் செல்களை   புதுப்பிக்க உதவுகிறது. இது உடலில்   உள்ள தசைகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. 100 கிராம்   கோழி இறைச்சியில் 30 கிராம் அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முட்டை:

நாம்   உண்ணும்  ஒவ்வொரு முட்டையிலும்   6 கிராம் முதல் 8 கிராம்   வகையிலான புரதச் சத்துக்கள்   நிறைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் 9-க்கும்   அதிகமான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம்   போன்ற தாதுச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது உடல் வலுவாக இருக்க   உதவி புரிகின்றது. எனவே தினமும் ஒரு வேக வைத்த முட்டையை உண்பது உடலுக்கு நன்மையை  தரும்.

தண்ணீர்:

நமது   உடலில்   70 சதவீதம்   தண்ணீர் நிறைந்துள்ளது.  உடலிலுள்ள தசை திசுக்கள்  75 சதவீதம் நீரால் நிரப்பப்பட்டதே.  எனவே தினமும் சரியான அளவில் தண்ணீரை   குடிப்பது உடலுக்கும், உடலில் உள்ள தசைகளுக்கும்  நன்மை தரும். எனவே தண்ணீர் சரியான அளவு குடிக்கவில்லை  எனில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு பல விதமான உடல் உபாதைகள்  ஏற்படக் கூடும்.

உடலில் வளர்ச்சிதை மாற்றத்தால்   ஏற்படும் பாதிப்பால் தசைகளின்   வலிமை குறைந்து விடும். இதை தடுக்க  தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும்.

மீன் எண்ணெய்:

இந்த   எண்ணெயில்   தசைகளின் வளர்ச்சிக்கு   தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி  அதிகளவில் உள்ளதால், உடலில் வளர்ச்சிதை   மாற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மீன் எண்ணெயை   உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் உள்ள தேவையற்ற   கொழுப்புகள் கரைந்து விடும். தசைகள் வலிமையுடன் இருக்கும்.

ஓட்ஸ்:

ஓட்ஸ்- ல் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்  போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவி புரிகின்றது.  நீங்கள் உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவு ஓட்ஸ் ஆகும்.

பசலைக்கீரை:

பைட்டோசிடை ஸ்டீராய்டு  என்கின்ற வேதிப்பொருள் பசலைக்கீரையில்   உள்ளது. இது 20 சதவீதம் தசைகள் வளர்ச்சிக்கு   உதவி புரிகிறது. எனவே இதை வாரத்திற்கு ஒருமுறையாவது   உண்டு வருவது உடலுக்கு நன்மை தரும் செயலாக இருக்கும்.

 அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன்  எனும் என்சைம் உள்ளதால், இது   உடலில் தசைகளில் ஏற்படும் வீக்கத்தை  குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் தசை   வளர்ச்சிக்கும் பெரிதளவில் உதவி புரிகின்றது.  காலையில் மற்றும் எந்த நேரங்களில் உடற்பயிற்சி   செய்தாலும், அதன் பிறகு இதை உண்பது உடலுக்கு நன்மையை  தரும்.

வாழைப்பழம்:

 ப்ரோமெலைன்  வாழைப்பழத்தில்  உள்ளதால் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க   உதவுகிறது. நம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக   இருந்தால், தசையின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

புரோக்கோலி:

  •  தக்காளி, மக்காச்சோளம், மிளகு   ஆகியவற்றுடன் புரோக்கோலியை சேர்த்து   வேக வைத்து சாலட்டாக உண்ணலாம். இதில்   உள்ள வைட்டமின்- c தசையில் உள்ள திசுக்களின்  ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.
  • இதில்   தாதுச்சத்து   மற்றும் நார்ச்சத்து   அதிகளவில் உள்ளதால் திசுக்களின்  வளர்ச்சிக்கு எளிதில் உதவி புரிகிறது.

பாதாம்:

  • கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்  போன்ற சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளதால் உடலில்   உள்ள தசைகள் வளர இது உதவி புரிகிறது. பாதாம் தசைகளின்  வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, உடல் வலிமை பெறவும் உதவுகிறது.
  • எனவே   இந்த 10 உணவுகளை   கட்டயமாக உண்டு வாருங்கள், இது   உங்களை ஆரோக்கியமாக வாழ உதவும்

Leave a Reply