கண்களை காக்கும் 20-20-20 | IT நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் படிங்க!

Author: Dhivagar
4 September 2021, 1:00 pm
20-20-20 rule for eyes
Quick Share

IT நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், மொபைலில் நீண்ட நேரம் கேம் விளையாடுபவர்கள், அதிக நேரம் டிஜிட்டல் திரையை பார்க்க வேண்டி உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த தங்கள் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், உங்கள் பார்வை திறனில் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

அதற்கு முக்கியமானது தான் 20-20-20 விதிமுறை. அதென்னங்க 20-20-20 விதிமுறை என்று தெரிய வேண்டுமா? இந்த பதிவை முழுசா படிங்க.

20-20-20 விதி என்பது அதிக நேரம் டிஜிட்டல் திரையைப் பார்க்கும்  கண்களுக்கு ஆறுதல் தருவதற்கு ஆகும். சீரான இடைவேளையைப் பின்பற்றி கண்களுக்கு ஓய்வு கொடுத்தாலே கண்களின் ஆரோக்கியம் அழுத்தம் இல்லாமல் பாதுகாக்கப்படும். 

20-20-20 விதிமுறை என்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. மிகவும் ஈசியாக நாம் பின்பற்ற ஏற்றது தான்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் போனில் அல்லது வாட்சில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு அலெர்ட் வைத்துக்கொள்ள வேண்டும். 

அப்படி உங்கள் போன் அல்லது வாட்ச் உங்களுக்கு நினைவூட்டலை  வழங்கும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை டிஜிட்டல் திரையிலிருந்து கண்ணை விலக்கி 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தில் ஏதேனும் காட்சிகளைப் பார்க்க வேண்டும். 

அப்படி இல்லையென்றால் 20 விநாடிகள் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். இதனால் நம் கண்களுக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை டிஜிட்டல் திரையைப் பார்ப்பதிலிருந்து ஓய்வு இடைவேளைக் கிடைக்கும். இதனால் கண்களுக்கு தொடர் அழுத்தம் ஏற்படாது.  

முடிந்தவரை, கண்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். முட்டை, பீன்ஸ், முளைக்கட்டிய பயறு வகைகள், சர்க்கரை வள்ளிகிழங்கு, கீரைகள், மீன்கள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆன்டி-கிளேர் கிளாஸ் பாதுகாப்பு கொண்ட லேப்டாப் திரைகளை மட்டுமே பாருங்கள். அதிக நேரம் டிஜிட்டல் திரையைப் பார்ப்பதை தவிர்த்துக்க்கொள்ளுங்கள்.

Views: - 395

1

0