வைட்டமின் D குறைபாடு இருந்தால் இதெல்லாம் ஆகுமா? இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க!

10 May 2021, 9:11 pm
5 beauty benefits of vitamin D
Quick Share

இந்த வைட்டமின் D என்பது சூரிய ஒளி ஊட்டச்சத்து என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் D என்பது உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது மனித உடல் அதை தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். உலர் உணவுகள், சால்மன் மீன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு போன்றவை வைட்டமின் D க்கான உணவு ஆதாரங்களாக இருக்கின்றன. உடலில் கால்சியம் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வைட்டமின் D மிக முக்கியமானது. மேலும், பாஸ்பரஸின் அளவை பராமரிக்க உதவியாக இருக்கிறது. வழக்கமாக வைட்டமின் D உள்ள உணவை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு காய்ச்சல் மற்றும் நீரிழிவு நோய் போன்ற சிக்கல்களிலிருந்து விலகியே இருக்கலாம்.

உங்கள் உடலுக்கு இந்த ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால், பலவீனம், சோர்வு, எலும்பு தேய்மானம் மற்றும் முதுகுவலி, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

வைட்டமின் D குறைபாட்டிற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் சில உயரமான இடத்தில் வசிப்பது, மாசுபட்ட பகுதியில் இருப்பது, கருமையான சருமம், பருமனாக இருப்பது, குடல் ஆரோக்கியம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். வைட்டமின் D ஆரோக்கிய நன்மைகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அழகையும் மேம்படுத்தும். 

தோலழற்சி: வைட்டமின் D போதுமான உட்கொள்ளாவிட்டால் தோல் சிவத்தல் மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

முகப்பரு: வைட்டமின் D ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது முகப்பருவைத் தடுக்க உதவுகிறது.

முதுமை தடுப்பு: குறைந்த அளவு வைட்டமின் D உட்கொள்ளல் வயதாகும் செயல்முறையை வேகப்படுத்தும். சரியான அளவு வைட்டமின் D உட்கொன்றால் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

முடி வளர்ச்சி: வைட்டமின் D மயிர்க்கால்களை தூண்டும் தன்மைகொண்டது. இது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

பொடுகு: வைட்டமின் D குறைபாடு பொடுகு சம்பந்தபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே பொடுகு பிரச்சினை இல்லாமல் இருக்க போதுமான அளவு வைட்டமின் D எடுத்துக்கொள்ள வேண்டும்.

Views: - 268

0

0