வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும்? | Metabolism

Author: Dhivagar
3 September 2021, 11:05 am
5 easy ways to boost your metabolism
Quick Share

வளர்சிதை மாற்றம் என்பது உடலில் நிகழும் அனைத்து ரசாயன எதிர்வினைகளையும் விவரிக்கும் ஒரு சொல். இந்த ரசாயன எதிர்வினைகள் நம் உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியம்.

அதுமட்டுமில்லாமல் வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக நிகழ்ந்தால் தான் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக எரிக்கப்படும். கலோரிகள் அதிக எரிக்கப்படுகிறது என்றால், நீங்கள் அதிகமாக எடை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதனால் நம் உடலில் அதிக வளர்சிதை மாற்றம் என்பது மிகவும் அவசியம். நம் உடல் ஆற்றல் உடன் இருக்கவும், நாள் முழுவதும் நன்றாக உணரவும் உதவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிககும் 5 எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலையில் சீக்கிரம் எழுந்துக்கொள்ள வேண்டும்

ஒரு நாள் ஆரோக்கியமாக தொடங்குவதற்கு, முந்தைய நாள் இரவு நன்கு தூங்கியிருக்க வேண்டும். நல்ல தரமான தூக்கம் வெற்றிகரமாக எடை இழப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் பிஸியான நாளில், நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.

உங்கள் காலை உணவை சாப்பிடுவதற்கு முன், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வேண்டி காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுங்கள்

பெரும்பாலான மக்களுக்கு, அலுவலக வேலைகளே அவர்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இதனால் வீட்டிற்கு வரும் நேரத்தில், அவர்கள் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள், ஜிம்மிற்கு வெளியே செல்ல அவர்களுக்கு ஆற்றல் இருப்பதும் இல்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க வேலையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்யவேண்டி இருந்தால், நாள் முழுவதும் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்வதால், உங்கள் உற்பத்தித்திறனையும், தற்போதைய வேலையில் கவனம் செலுத்தும் திறனையும் அதிகரிக்க முடியும்.

சத்தான உணவை உட்கொள்ளுங்கள் 

மதிய உணவில் சத்தான உணவை உட்கொள்ளுங்கள். அதில் புரதம் மற்றும் பிற வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பசியில்லாமல் சிற்றுண்டி எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். சிப்ஸ், சாக்லேட்டுகள், கேக்குகள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

உணவின் வெப்ப விளைவு

சாப்பிடும்போது உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். நம் உடல் மென்று , ஜீரணிக்கும் மற்றும் சேமித்து வைக்கும் செயல்முறைக்கு அதிக கலோரிகளை எரிக்கும். இது உணவின் வெப்ப விளைவு (Thermic effect of Food – TEF) என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் தினசரி கலோரி செலவில் 5-10 சதவிகிதம் மட்டுமே ஆகும்.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால், பல மணி நேரத்திற்கு பசியைக் கட்டுப்படுத்தலாம், இது அதிகப்படியான உணவை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளவேண்டிய தேவையைக் குறைக்கிறது. நன்கு பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். 

உடற்பயிற்சி செய்யுங்கள்

சந்தேகமின்றி, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உடற்பயிற்சி மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். நன்கு உடற்பயிற்சி செய்தால் வளர்ச்சிதை மாற்றம் நன்றாக நிகழும்.

Views: - 822

0

0