அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 5 இயற்கை வைத்தியங்கள்

Author: Hemalatha Ramkumar
18 August 2021, 11:46 am
5 natural remedies to lower blood pressure
Quick Share

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் என்பது உலகெங்கிலும் உள்ள கோடி கணக்கான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த நிலையில் தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தம் அதிக அளவில் உயரும், இது காலப்போக்கில் இதயத்தை சேதப்படுத்தும் மற்றும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

எனவே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டவுடன், இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தானதாக மாறக்கூடும். 

அதிர்ஷ்டவசமாக, அதிக இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. தினசரி மருந்து உட்கொள்ளலைத் தவற, மற்ற சில இயற்கை வைத்தியங்கள் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றன. உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 5 சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

சோடியம் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்

 • அதிகப்படியான சோடியம் உட்கொள்ளல் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 
 • பக்கவாதம் வருவதற்கு சோடியம் உட்கொள்ளல் அதிகரிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். 
 • சோடியத்தின் தினசரி உட்கொள்ளல் அளவை கொஞ்சம் குறைத்தாலும் கூட 5 முதல் 6 மிமீ Hg உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். 
 • சோடியம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 
 • பொதுவாக, மக்கள் ஆரோக்கியமாக இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட  உணவுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். 
 • சாதாரண நபர் ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் (மிகி) உப்புக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும்

 • பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். 
 • சிறிய அளவில் உடலுக்குத் தேவைப்படும் இந்த தாது அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது மற்றும் இரத்த நாளங்களின் அழுத்தத்தை குறைக்கிறது. 
 • பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சோடியம் நிரம்பியுள்ளது மற்றும் அதை சமநிலைப்படுத்த நீங்கள் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவை உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகளில் காய்கறிகள், பச்சை கீரைகள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு ஆகியவற்றையும், பழங்களில் முலாம்பழம், வாழைப்பழம், வெண்ணெய், ஆரஞ்சு போன்ற பழங்களையும், உலர் பருப்புகளையும் மற்றும் விதைகள், பால், தயிர், கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற இறைச்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

 • ஒவ்வொரு நபருக்கும் வழக்கமான உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். 
 • ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கவும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 • உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது மிக மிக அவசியம். 
 • வழக்கமான உடற்பயிற்சி உங்கள் இதயத்தை வலிமையாக்கும், இரத்தத்தை மிகவும் திறம்பட பம்ப் செய்ய உதவுகிறது மற்றும் தமனிகளில் அழுத்தத்தைக் குறைக்கும். 
 • உங்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் போதும்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்

 • சிகரெட் மற்றும் ஆல்கஹால் இரண்டும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். 
 • உலகெங்கிலும் உள்ள உயர் இரத்த அழுத்த நோய்களில் 16 சதவிகிதம் மது காரணமாக ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. 
 • ஆல்கஹால் மற்றும் நிகோடின் இரண்டும் தற்காலிகமாக இரத்த அழுத்த அளவை அதிகரித்து இரத்த நாளங்களை சேதப்படுத்தும். 
 • இரண்டு விஷயங்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்படுகிறது. 
 • உடல் நலம் பெற அவற்றை விட்டுவிடுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்துவிடுங்கள்

 • சமீபத்திய அறிக்கைகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உணவுகளில் சர்க்கரையைச் சேர்ப்பது கூட உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும் என்று கூறுகின்றன. 
 • இந்த இரண்டு உணவுப் பொருட்களின் உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தின் அளவை இயற்கையாக நிர்வகிக்க உதவும். 
 • ரொட்டி மற்றும் வெள்ளை சர்க்கரை போன்ற உணவுகள் உங்கள் இரத்த ஓட்டத்தில் விரைவாக சர்க்கரையாக மாறி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 
 • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 • சுத்திகரிக்கப்பட்ட மாவுக்கு பதிலாக முழு தானியங்கள் மற்றும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாம்.

Views: - 490

0

0