30 நொடிகளில் நிம்மதியான உறக்கத்தை பெற வேண்டுமா? உங்களுக்கான 5 சிம்பிள் டிப்ஸ்!

24 March 2020, 11:02 pm
sleep-woman-updatenews360
Quick Share

ஓடிக்கொண்டிருக்கும்   இந்த நிலையற்ற வாழ்க்கையில்   சிலருக்கு உறக்கமும் நிம்மதியாக   கிடைப்பதில்லை. ஒரு மனிதன் சராசரியாக  தினமும் 8 மணி நேரம் நிம்மதியான உறக்கம்   கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய கால சூழ்நிலை, மன   அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்ற பல விதமான   காரணங்களால் நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காமல்   போகின்றது. தூக்கம் தான் உடலுக்கும், மனதிற்கும் ஒரு நிம்மதியை தரும். ஓய்வு   இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தால் , உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளும்  பாதிக்கும். நம்முடைய உடலுக்கும், அழகிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறமோ, அதே போல்   நம் தூக்கத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். எனவே நிம்மதியான தூக்கத்திற்கு நீங்கள்   பாலோ செய்ய வேண்டிய, சிம்பிள் குறிப்புகள் உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள்  பாலோ செய்தால் போதும், உங்களுக்கு 30 நொடிகளில் உறக்கம் வந்துவிடும்.

sleep-woman-updatenews360

தினமும்  ஒரே நேரத்தில்  தூங்குங்கள்:

  • நீங்கள்   தினமும் ஒரே   நேரத்தில் தூங்கும்   பழக்கத்தை கொண்டிருங்கள். காரணம்   தினமும் சரியான நேரம் ஆனதும் உங்களுக்கு  தூக்கம் வந்துவிடும்.
  • மூளையானது செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை  சரியாக வைத்து, உங்களுக்கு தானாக தூக்கம்   கிடைக்க உதவி புரிகின்றது. இந்த பழக்கத்தை நீங்கள்   சிறிது காலம் பாலோ செய்தால் போதும், உங்களுக்கு இரவில்   சரியான சமயத்தில் தூக்கம் வந்து விடும்.

புத்தகங்கள்   படிக்கலாம்:

சுவாரசியமான   புத்தகங்கள் படிக்காமல், போர்   அடிக்கும் புத்தகங்களை படித்தால்   உங்களுக்கு தூக்கம் வந்து விடும்.

இசையை  கேட்கலாம்:

உங்களுக்கு   பிடித்தமான, நல்ல   மெல்லிசையை நீங்கள்   கேட்கலாம். இதனால் உங்களுக்கு    மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான   ஆழந்த உறக்கம் கிடைக்கும். இசைக்கு மனதை   அமைதிப்படுத்தும் மற்றும் மகிழ்ச்சிப்படுத்தும்  சக்தி உள்ளது.

குளிர்ச்சியான   அறை :

பொதுவாக   நீங்கள் உறங்கும்  அறை, மிகவும் குளிர்ச்சியுடன்   இருப்பது அவசியமாகும். குறிப்பாக   காற்றோட்டமுள்ள அறைகளில் உறங்கினால்  உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.  காரணம் வெதுவெதுப்பான அறைகள் உங்களுக்கு தூக்கத்தை   வரவழைக்காது. ஆனால் குளிர்ச்சியாக இருக்கும் அறைகள் நிம்மதியான, ஆழ்ந்த   தூக்கத்தை உங்களுக்கு வர வைக்கும்.

வெதுவெதுப்பான பால்:

வெதுவெதுப்பான   பால் உங்களுக்கு   நிம்மதியான தூக்கத்தை  வர வைக்கும். இரவு தூங்கும்   முன்பு 15 நிமிடங்களுக்கு முன்பு   பால் அருந்திவிட்டு தூங்கினால், உங்களுக்கு   நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். பால் ட்ரிப்டோபேன்  அளவை சீராக்கி உங்களுக்கு நல்ல தூக்கத்தை வர வைக்கும்.

Leave a Reply