நாவல் பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?

21 June 2021, 8:41 pm
7 Amazing Benefits of Eating Black Plum
Quick Share

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நாவல் பழம் இனிப்பு சுவையும் பல அற்புதமான நன்மைகளையும் கொண்டது. இந்த பழம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தில் பல மருத்துவ மற்றும் சுகாதார நன்மைகள் உள்ளன. வயிற்று வலி, நீரிழிவு நோய் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளை போக்க சிறந்த வீட்டு வைத்திய உணவாக பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்சினைகளையும் இந்த பழம் குணப்படுத்துகிறது. நாவல் பழத்தின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இதோ.

1. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்

வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து நிறைந்த நாவல் பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம், உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக ஆக்ஸிஜனை கொண்டு சென்று உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

2. முகப்பருவைத் தடுக்கும்

நாவல் பழம் சருமத்தில் ஏற்படும் பருக்களைப் போக்கும் திறன் கொண்டது. உங்களுக்கு சரும பிரச்சினைகள் இருந்தால் நாவல் பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

3. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நாவல் பழம் ஹீமோகுளோபினின் அளவை மேம்படுத்தக்கூடியது மற்றும் பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சுத்திகரிப்பு முகவராக செயல்படுகிறது. இது உங்கள் தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின் C மற்றும் A போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

4. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த நாவல் பழம் உங்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 100 கிராம் நாவல் பழத்தில் சுமார் 55 மி.கி பொட்டாசியம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை உங்களை நெருங்க விடாமல் பார்த்துக்கொள்ள நாவல் பழம் உதவியாக இருக்கும். இது உங்கள் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

5. ஈறுகள் பற்களை பலப்படுத்தும்

உங்கள் ஈறுகளுக்கும் பற்களுக்கும் நாவல் பழம் நன்மை பயக்கும். நாவல் பழ இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க இது உதவியாக இருக்கும். நாவல் பழ இலையை உலர வைத்து, பின்னர் அதை ஒரு தூளாக அரைத்து பற்பொடியாக பயன்படுத்தலாம். இது ஈறு இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயைத் தடுக்க உதவும். 

6. தொற்றுநோயைத் தடுக்கும்

நாவல் பழத்திற்கு பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பழத்தில் மாலிக் அமிலம், டானின்கள், கல்லிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் மற்றும் பெத்துலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இந்த பழம் தொற்றுநோய்களைத் தடுக்கும் திறன் கொண்டது.

7. நீரிழிவு நோய் குணமாக்கும்

அதிகப்படியான சிறுநீர் போக்கு மற்றும் அதிக தாகம் போன்ற நீரிழிவு நோய் சார்ந்த அறிகுறிகளை நாவல் பழம் குணப்படுத்தும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கும். இந்த மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகளை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

Views: - 390

0

0