எடையிழப்பு முதல் எட்டுத்திக்கும் காண உதவும் கண்ணின் ஆரோக்கியம் வரை: கேரட்டின் அற்புத நன்மைகள்

14 May 2021, 9:03 pm
8 Amazing Health Benefits Of Carrots: From Weight-loss To Healthy Eyesight
Quick Share

தினமும்  நம் உணவோடு காய்கறி, கீரை, பழ வகைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான்  உடலுக்கு தேவையான ஆற்றலோடு ஆரோக்கியமாக இருக்க முடியும். அப்படி பல ஆரோக்கியமான காய்கறிகளில் மிக முக்கியமான ஒன்றென்றால் கேரட்டைச் சொல்லலாம். கேரட்டைப் பச்சையாகவும்  சாப்பிடலாம், குழம்பாகவும், பொறியல் செய்து, சாலட், ஜூஸ் என நமக்கு பிடித்தவாறு எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதனால் அப்படி என்ன  நன்மை கிடைக்கப்போகிறது? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

  • இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின் ஆதாரமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
  • இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இதைய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவியாக இருக்கிறது. 
  • கேரட்டில் லியூட்டின்  (lutein) மற்றும் லைகோபீன் (lycopene) இருப்பதால் கண்பார்வை குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம். இது கண்பார்வை குறைபாட்டைப் போக்கும் திறன் கொண்டது.
  • எடை இழக்கும் முயற்சியில் நீங்கள் இருந்தால், நீங்கள் தவிர்க்கக்கூடாத ஒரு உணவு கேரட். இது  நார்ச்சத்துக்களை கொண்டிருப்பதால் பசி உணர்வை குறைத்து உங்கள் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
  • சீரான குடல் இயக்கம் மற்றும் செரிமான அமைப்பு சீராக கேரட் மிகவும் உதவியாக இருக்கும். 
  • கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க ஏற்ற உணவு கேரட்.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உங்களை ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள கேரட் அவசியம்.
  • பெண்களாயினும் ஆண்களாயினும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் கேரட்டை தங்கள் உணவில் தவிர்க்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த தீவிரமான கொரோனா தொற்று பரவி வரும் வேளையில், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த கேரட் சாப்பிடுவது கட்டாயம்.  

Views: - 264

0

0