பத்தே மிளகு கொண்டு சொத்தை பற்கள் அனைத்தையும் சரி செய்ய ஒரு அருமையான வழி!!!

1 July 2020, 8:20 am
Quick Share

பத்து மிளகு இருந்தால் பகைவரும் வீட்டிற்குள் வரமாட்டார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று நாம் பத்தே மிளகை கொண்டு பற்களில்  இருக்கக் கூடிய பூச்சிகளை எப்படி சரி செய்வது என பார்க்க போகிறோம். நிச்சயமாக வேலை செய்யக்கூடிய ஒரு சிறந்த மருத்துவம் இது. ஐந்தே நிமிடத்தில் உங்கள் சொத்தை பற்களில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறி விடும். அது மட்டுமல்ல மீண்டும் சொத்தை பற்கள் வராமல் பார்த்து கொள்கிறது.

இதனை செய்வதற்கு பத்தில் இருந்து பன்னிரண்டு மிளகு எடுத்து அதனை ஒரு உரலில் போட்டு இடித்து கொள்ளவும். மிளகு பொடி பயன்படுத்த கூடாது. மிளகினை எப்போதும் ஃபிரஷாக அரைத்து தான் பயன்படுத்த வேண்டும். இடித்த மிளகினை ஒரு சிறிய பவுலில் போட்டு கூடவே 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்போது இதனை ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வருவதற்காக நான்கில் இருந்து ஐந்து சொட்டு தண்ணீரை பயன்படுத்தி கலந்து விடுங்கள். இந்த பேஸ்டை உங்கள் சொத்தை பற்களிலோ அல்லது வாயினுள்ளோ வைக்க கூடாது. அதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பற்களின் நேர் எதிராக வெளிப்புறத்தில் இந்த பேஸ்டை தடவ வேண்டும்.

அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து போல போட்டாலே போதுமானது. இதனை வெளிப்புறத்தில் பயன்படுத்துவதினால் இது வேலை செய்யுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கவலையே வேண்டாம்… நிச்சயமாக வேலை செய்யும். சொத்தை பற்களினால் பல வலிகளை நீங்கள் தாங்கி கொண்டு இருந்திருப்பீர்கள். 

பல் வலியினால் ஏற்படும் அந்த அவஸ்தையை மனதில் கொண்டு ஒரு முறை இதனை முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக நல்ல ஒரு பலனை அடைவீர்கள். பேஸ்டை தடவிய ஐந்து நிமிடத்திலே சொத்தை பற்களில் இருக்க கூடிய வெண்மை நிற புழுவானது வெளி வர ஆரம்பித்து விடும்.

இந்த நேரத்தில் உங்கள் வாயில் உமிழ் நீர் சுரக்க ஆரம்பிக்கும். இந்த மருத்துவம் செய்த பிறகு எக்காரணம் கொண்டும் உங்கள் உமிழ்நீரை விழுங்கி விடாதீர்கள். அதனை வெளியே துப்பி விடுங்கள். அதன் வழியாக தான் புழுக்கள் வெளியேறும். இதன் பிறகு அந்த சொத்தை பல்லில் இருந்து வெள்ளை நிறத்தில் மாவு போன்ற ஒன்று வெளிவர ஆரம்பிக்கும். 

அதனையும் வெளியே துப்பி விட வேண்டும். இது அனைத்தும் முடிந்த பிறகு வாயில் வெதுவெதுப்பான உப்பு தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடங்கள் போல கொப்பளித்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் ஒரு முறை செய்தாலே போதும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த மருத்துவ குறிப்பை பயன்படுத்தி நீங்களும் நலம் பெறுங்கள்.

Leave a Reply