காபி குடிக்கும் ஆண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கோங்க!!!

6 February 2021, 9:34 pm
Quick Share

பலருக்கு, காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடித்தால் தான் அன்றைய நாளே தொடங்கும். இது அவர்களின் தினசரி வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். காலையில் அவர்கள் செய்யும் முதல் விஷயம் இதுவாக தான் இருக்கும். தினமும் காபி குடிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் இதனை தினசரி செய்து வருவது எதிர்பாராத நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அது குறித்த ஒரு பதிவு தான் இது. 

காபி குடிப்பதால் ஆண்களில் காது கேளாமை குறைவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர்  காபியையாவது குடிக்கும் ஆண்கள், காபி  குடிக்காதவர்களை விட 15% குறைவான காது கேளாதவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்காக ஏறக்குறைய 37,000 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் அவர்களின் தரவு  பயன்படுத்தப்பட்டது. காபி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும்  இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், செவிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு காட்டுகிறது.

மேலும் இதன் சிறப்பு என்னவென்றால், இந்த காபி காஃபினேட் செய்யப்பட்டதா அல்லது டிஃபெஃபினேட் செய்யப்பட்டதா, வடிகட்டப்பட்டதா அல்லது வடிகட்டப்படாததாக இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே விதமான நன்மைகள் கிடைக்கும். 

இருப்பினும், பெண்களுக்கு காபி மற்றும் செவிப்புலன் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. இதற்கு உடலியல் வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று குழு கூறுகிறது.

ஏனென்றால், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அதிக அளவு (பெண்களின் உடலில் அதிகமாக உள்ளது) வயது தொடர்பான செவித்திறன் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது. எனவே ஆராய்ச்சியாளர்கள் உணவின் தாக்கம் ‘குறைவான தொடர்புடையதாக இருக்கும்’ என்று கூறினர்.

ஆய்வின் தொடக்கத்தில் கேட்கும் திறன் சரிபார்க்கப்பட்டது. பின்னர், முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன மற்றும் பிற சுகாதார மற்றும் வாழ்க்கை முறை காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஒரு நாளைக்கு ஒன்றரை முதல் நான்கரை கப் காபி குடித்த ஆண்கள் காது கேளாமையை அனுபவிப்பது குறைவு என்று முடிவுகள் காட்டின.

ஆனால் காது கேளாததைத் தடுக்கும் முயற்சியில் தனிநபர்கள் அதிக அளவு காபியை உட்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். ஏனெனில் இது பிற  உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

Views: - 14

0

0