எப்போதும் சோர்வா இருக்கா… அதுகூட இந்த அறிகுறிகளும் இருக்கான்னு பார்த்துக்கோங்க!!!

17 April 2021, 2:17 pm
Quick Share

நீங்கள் எப்போதும்  சோர்வாகவும், ஆற்றல் இல்லாமலும் உணர்கிறீர்களா… இது உங்களை மனச் சோர்வுக்கு ஆளாக நேரிடும். உங்களுக்கு செய்ய நிறைய வேலை  இருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அதைச் செய்ய உங்களிடம் மிகக் குறைந்த நேரமும் சக்தியும் இருக்கலாம். ஆகவே இந்த விஷயங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் சோர்வடைந்து போகலாம்.

விஷயங்களை மிகைப்படுத்தியதாலும், ஒரே நேரத்தில் பல விஷயங்களை வரிசையாகக் கொண்டிருப்பதாலும் இது நிகழலாம். இது இயற்கையாகவே, ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை சோர்வடையச் செய்து, ஆற்றல் இல்லாமல் ஆக்கி விடும். இதனை அனுபவித்து வந்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய மன சோர்வுக்கான 5 அறிகுறிகள் இங்கே உள்ளது. 

1. தூக்கமின்மை:

உங்கள் மூளை கூடுதல் நேரம் வேலை செய்கிறது என்றால், தூங்குவது மிகவும் சோர்வாக இருக்கும். தொடர்ந்து கவலைப்படுவதும் மன அழுத்தமும் தூக்கமின்மை மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகளுக்கு வழிவகுக்கும்.

2. கவலை:

பதற்றம் மற்றும் மன அழுத்தம் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். இது எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஊக்குவிக்கும். மேலும் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் குறைவாகவோ அல்லது சோகமாகவோ உணரலாம்.

3. பசியிழப்பு:

நீங்கள் சாப்பிட போதுமான உந்துதல் இல்லாமல் போகலாம். உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் இருக்கும். இதனால் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். நீங்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்த்துவிட்டு, குறைந்தபட்ச ஆற்றலோடு  உயிர்வாழ முயற்சிப்பீர்கள்.

4. குழப்பம்:

உங்கள் மூளை அதிக சுமைகளை அனுபவிப்பதால் தகவல்களைச் செயலாக்குவதில் சிக்கல் இருக்கும். இது விஷயங்களை நினைவில் வைக்க முடியாமல் போகும்  மற்றும் தெளிவாக சிந்திக்க முடியாது.

5. தலைச்சுற்றல்:

தலைச்சுற்றலை அனுபவிப்பது என்பது உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆற்றல் இல்லாமல் ஆக்கி விடும்.  உங்கள் மூளைக்கு ஒரு இடைவெளி தேவை. நீங்கள் செய்ய நிறைய வேலை இருப்பதால், உங்களுக்கு கட்டாயம்  ஓய்வு தேவை.

Views: - 43

0

0