தமணிகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டுமா? நீங்கள் உண்ண வேண்டிய 5 உணவுகள் இதோ!

24 March 2020, 7:36 pm
Food-heart-updatenews360
Quick Share
  • மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி   எனும் தன்மை இருப்பதால் தமணிகளின் சுவரை சேதமடையாமல் பாதுகாக்க   உதவுகின்றது.
  • நம்முடைய  ஒழுங்கற்ற உணவு பழக்கத்தால்  பல விதமான இருதய நோய்கள்   நமக்கு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம்   சீராக இருக்கவேண்டுமென்றால் தமனிகள்   ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு   நீங்கள் 
  • நட்ஸ், சிட்ரஸ் பழங்கள், மீன் போன்ற   உணவுகளை உண்பதால் இதயம் ஆரோக்கியமாக   இருக்கும்.
  • தமணிகள் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை   இதயத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.  உடல் முழுவதும் ரத்தத்தை சீராக எடுத்துச்செல்ல  முதலில் தமணிகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். தமணிகளில்   அடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடக்காது. இதனால்  தான் நம் உடல் சீரற்ற நிலை அடைந்து மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள்  போன்றவை ஏற்படுகின்றன. நம் சரியான உணவு எடுத்துக் கொள்ளாதது, நாம் வாழ்வில் இருக்கும்   ஒழுங்கற்ற தன்மையும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகும்.
  • கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் மரபு பிரச்னை   போன்ற பல விதமான உடல் உபாதைகள் இருந்தாலும் கூட தமணிகளில் அடைப்பு ஏற்படும். தமணிகளில் அடைப்பு ஏற்படாமல்   இருக்க முதலில் சரியான உணவு பழக்கத்தை கையாள வேண்டும். என்னென்ன உணவுகளை உட்கொண்டால் தமணிகளில் அடைப்பு   ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதை இதில் காண்போம்.

நட்ஸ்

 ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும்   நட்ஸில் நிறைந்துள்ளதால் தினமும்   ஏதாவது ஒரு நட்ஸை உண்டு வரலாம். பாதாம், முந்திரி  போன்றவற்றை தினமும் உண்டு வருவதால், இதில் உள்ள மக்னீசியம்    தமணிகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் நட்ஸ்   உடலுக்கு தேவையான ஒட்டு மொத்த ஆற்றலையும் தர உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் : 

தினமும் சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை  உபயோகிப்பதால் இதயம் ஆரோக்கியமாக  இருக்க உதவும். இது உடலுக்கு தேவைப்படும்   ஆரோக்கியமான கொழுப்புகளை தர உதவி புரிகின்றது. ஆலிவ்   எண்ணெயை பயன்படுத்தி சாலட் போன்றவற்றை தயாரிக்கலாம். இருதய   நோய்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க ஆலிவ் எண்ணெய் பயன்படுகின்றது.

மஞ்சள்

  •  இயற்கையாகவே  மஞ்சளில் மருத்துவ   குணங்கள் உள்ளது, அதுமட்டுமில்லாமல்   இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக   செயல்படுகிறது. பல விதமான உடல் உபாதைகளிலிருந்து   நம்மை தற்காத்துக் கொள்ள மஞ்சள் உதவி புரிகின்றது.
  •  மஞ்சளில்  இருக்கும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை  தமணிகளின் சுவரை சேதமடையாமல் பாதுகாப்பாக   வைக்க உதவுகிறது. மேலும் தமணிகளில் கொழுப்பு  சத்துக்கள் தேங்காமல் இருக்க உதவி புரிகின்றது. எனவே  தினமும் உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

சிட்ரஸ்: 

வைட்டமின் -சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்  சிட்ரஸ் பழத்தில் உள்ளதால், தமணிகளின்   ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை  மற்றும் கிவி ஆகிய பழங்களில் வைட்டமின்-சி உள்ளதால் தாராளமாக   உட்கொள்ளலாம். இதை தினமும் உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நன்மையையும்  விளைவிக்கும்.

மீன்கள்:

  • தமணிகள்  ஆரோக்கியமாக   இருக்க வேண்டுமென்றால்   கொழுப்பு நிறைந்த மீன்களை  உண்பது நல்லதாகும்.ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்க கூடிய மீன்களை   உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக   இருக்கும்.
  • இந்த   உணவு பொருட்களை    தினமும் சமைத்து உணவில்    சேர்த்து வாருங்கள் நண்பர்களே,  உங்கள் உடலும், இதயமும் ஆரோக்கியமாக   இருக்கும்!