உடல் கட்டுக்கோப்பாக இருக்க தினமும் செய்ய வேண்டிய அடிப்படை யோகா பயிற்சிகள்

4 June 2021, 7:40 pm
Basic Yoga Exercises One Must Do Every Day to Stay Fit
Quick Share

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு யோகா பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு தர வல்லது. தீவிரமாக பரவி வரும் தொற்றுநோய் காரணமாக நாம் அனைவரும் ஜிம் மற்றும் பூங்காக்கள் என எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பலரும் வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வதால், உடல் பருமனாகி உடல்நலம் சார்ந்த பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது போன்ற சமயத்தில் வீட்டிலேயே இருந்து உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள எளிய யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் சுகாதார நன்மைகளை பெற முடியும். 

உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் மனதை ஒருநிலைப்படுத்தவும் சில எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் வீட்டியிலேயே முயற்சிக்கலாம்.  அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விருக்ஷாசனம் (மரம் போன்ற தோற்றம்)

Basic Yoga Exercises One Must Do Every Day to Stay Fit

இந்த யோகாசனம் கவனம் மற்றும் மனதின் சமநிலையை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செய்ய முதலில் நேராக நிற்கவும். பின்னர் உங்கள் கைகளை மேலே உயர்த்தி உள்ளங்கைகளை ஒன்றாக இருக்கும்படி இணைக்கவும். ஒரு காலில் நிலையாக நின்று, மற்றொரு பாதத்தை நிற்கும் காலின் தொடைக்கு அருகில் கொண்டு வாருங்கள். சில வினாடிகள் இதே நிலையில்  நில்லுங்கள். இந்த தோரணையில் நேராக நிற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதே நேரத்தில் உங்கள் பின்புறத்தை சீராக வைத்து, இடுப்பை நெளிக்காமல் வைத்துக் கொள்ளுங்கள்.

தடாசனம் (பனை மர தோரணை)

Basic Yoga Exercises One Must Do Every Day to Stay Fit

இந்த யோகாசனத்தைச் செய்ய, கால்களை அகற்றி நேராக நின்று கொள்ளுங்கள். கைகளை நேராக நீட்டி கோர்த்துக்கொண்டு அப்படியே திருப்பி தலைக்கு மேல் உயர்த்திக்கொள்ளுங்கள். இப்போது பின்னங்காலை உயர்த்தி கால் விரல்களில் நிற்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு நிலைத்தன்மை கிடைக்கும். தசைகள் நீட்டிப்படைந்து உடல் வளர்ச்சி பெறும். 

உத்தனாசனம் (முன்னோக்கி வளைதல்)

Basic Yoga Exercises One Must Do Every Day to Stay Fit

மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு உங்கள் கால்களை நோக்கி முன்பக்கமாக வளைந்து கொள்ளுங்கள். தொடை எலும்புகள் முதலில் சற்று இறுக்கமாக உணர்ந்தால், முழங்கால்களை லேசாக வளைத்துக்கொள்ளுங்கள். கால்களை அகலமாக வைத்து, உங்கள் கைகளை தரையில் தொட்டு உங்கள் தலை முழங்காலை நோக்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தோரணை தொடைகளை வலுப்படுத்த உதவுகிறது, மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறியைப் போக்க உதவுகிறது, தூக்கமின்மை பிரச்சினையைக் குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

புஜங்காசனம் (பாம்பு தோரணை)

Basic Yoga Exercises One Must Do Every Day to Stay Fit

இந்த யோகாசனம் முதுகெலும்புக்கு மிகவும் வலுவூட்டுகிறது. தலை தரையை பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கால்களை நேராக வைத்து, உங்கள் கைகளின் ஆதரவுடன் உங்கள் மேல் உடற்பகுதியைத் தரையிலிருந்து தூக்குங்கள். சில நொடிகளுக்கு அதே தோரணையில் இருங்கள், உங்கள் வயிறு, மார்பு மற்றும் தலையை மெதுவாக தரைக்கு கொண்டு வந்து ஓய்வெடுக்கவும். இந்த தோரணை முழு உடலுக்கும் வலு சேர்த்து முதுகெலும்பை நெகிழ்வாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Views: - 235

0

0