வெள்ளரிக்கா.. பிஞ்சு வெள்ளரிக்கா! அடடா வெள்ளரிக்காய் இது உதவும்னு தெரியாம போச்சே!

12 July 2021, 6:03 pm
beauty benefits of cucumber
Quick Share

வெள்ளரிக்காய் பற்றி உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். கோடை காலத்துல வெள்ளரிக்காய் ஈஸியா கிடைக்கும். அதுவும் குறைஞ்ச விலையில் கிடைக்குற ஒன்னு என்றால் வெள்ளரிக்காயை அந்த லிஸ்ட்ல மிஸ் பண்ணவே முடியாது. இந்த வெள்ளரிக்காயில் 94 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருக்கு. அது மட்டுமில்லாம இதுல சத்திற்கும் ஒன்னும் குறைவில்லை.

இது நம்ம உடலின் செரிமான மண்டலத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தன்மைகொண்டது. உடலுக்கு இதமான தன்மையை கொடுக்கக்கூடியது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் கொடுப்பது உங்களுக்கே தெரியும். இதனை பெரும்பாலும் சாலட், சான்ட்விச் ஆக பயன்படுத்தலாம். இது போக வெள்ளரிக்காய்கு அழகு சார்ந்த பயன்களும் உண்டு. வைட்டமின் K மற்றும் C நிறைந்த வெள்ளரிக்காய் நம்மை அழகாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்திற்கு குணப்படுத்தும் தன்மையை அளிக்கிறது. இதனை ஒரு மாய்ஷரைசராகவும் பயன்படுத்தலாம். முகத்தின் கருமையை போக்கி நிறத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரிக்காயை பிற இயற்கை பொருட்களான தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இப்போது உங்கள் அழகை மேம்படுத்த வெள்ளரிக்காயை பயன்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.

  • கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையங்களுக்கு சிறந்த மருந்து வெள்ளரிக்காய். இதனை வெட்டி கண்களில் வைத்து கொள்ளும் போது குளிர்ச்சியை அளித்து கருமையை போக்கி கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • வெள்ளரிக்காய் சாறு அல்லது அதனை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை மாறி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
  • வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் உள்வீக்கத்தை குறைத்து பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது.
  • பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தை இருகச் செய்து சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தை மாற்றுகிறது.
  • சூரிய கதிர்களால் ஏற்படும் டேனை போக்கி ஒரு இயற்கை பிலீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகளை மறையச் செய்கிறது.

ஆரோக்கியமும் அழகும் தரக்கூடிய வெள்ளரிக்காயை எப்போதும் மிஸ் பண்ணிடாதீங்க!

Views: - 65

0

0