பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க! சீக்கிரமா அவ்ளோ அழகா மாறிடுவீங்க!

21 July 2021, 4:43 pm
beauty benefits of Oats And Lemon Face Pack
Quick Share

பெண்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் சருமத்தை அழகுடனும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும். இதற்கு கடைகளில் செயற்கையாக தயார் செய்யபட்ட பல கிரீம் மற்றும் பவுடர்களை எல்லாம் பயன்படுத்தி பயன் ஒன்றும் கிடைக்காமல் சலித்து போயிருப்பர். ஆனால் இயற்கையாகவே, நம் பாட்டி எல்லாம் சொல்லிவைத்துவிட்டு போன இயற்கை அழகு சாதன முறைகள் எல்லாம் இருக்கும்போது நாம் ஏன் ஏதோ பெயரே தெரியாத செயற்கை தயாரிப்புகளைத் தேடிச் செல்ல வேண்டும்? அப்படி உங்களுக்கு இயற்கை அழகையும் பொலிவையும் தரக்கூடியது தான் இந்த காடைக்கண்ணி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக். 

சரி இந்த காடைக்கண்ணி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்ய வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில்  1 தேக்கரண்டி காடைக்கண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோருக்கு காடைக்கண்ணி என்ற தமிழ் பெயர் தெரியாமல் இருக்கலாம் ஓட்ஸ் என்பதற்கு தான் காடைக்கண்ணி என்று பெயர். இந்த காடைக்கண்ணியை நன்கு வேகவைத்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் வேகவைத்து பிசைந்த காடைக்கண்ணியையும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்றாக ஒரு பேஸ்ட் தரத்தில் கலந்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் ஒரு ஃபேஸ் பேக் போல முகம் எல்லாம் பூசி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஒரு 5 நிமிடம் வரை மசாஜ் செய்த பிறகு, அதை அப்படியே 20 நிமிடங்கள் உலர விடவும். நன்கு உலர்ந்து பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொள்ளுங்கள். அதன் பிறகு அழுக்கு இல்லாத சுத்தமான மென்மையான துண்டு வைத்து முகத்தை ஒத்தி ஈரத்தை துவட்டிவிடுங்கள். இதை காலையில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காடைக்கண்ணி வீக்கத்தைக் குறைத்து சருமத்தை குணமாக்கும் பண்பைக் கொண்டது என்பதால் சருமம் பொலிவாக மிகவும் உதவியாக இருக்கும். காடைக்கண்ணி சருமத்தின் அழுக்குகளை நீக்கும் குணம் கொண்டது. இதனால் சரும துளைகளுக்குள் ஒளிந்துள்ள அழுக்குகளை நீக்கி உங்கள் முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும் எண்ணெய், பிசுபிசுப்பு மற்றும் அசுத்தங்களையும் போக்கும் தன்மைக் கொண்டது. எலுமிச்சை சாறு வைட்டமின் C நிறைந்திருப்பதால் சருமத்திற்கு பளிச்சென்ற ஒரு பொலிவைக் கொடுக்கும்.

உங்கள் சருமத்திற்கு எலுமிச்சை சாறு ஒத்துக்கொள்ளாது என்றால், எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நீர்த்துப்போக செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

Views: - 333

0

0

Leave a Reply