தினமும் காற்றாடியை ஓட விட்டு தூங்குபவரா நீங்கள்…. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!!!

22 May 2020, 2:05 pm
benefits and problems of sleeping with fan and without fan
Quick Share

சரியாக தூங்குவதினால் உடலில் உள்ள நோய்கள் மட்டும் அல்லாமல் மனதில் ஏற்படும் நோயும் குறையும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஒழுங்காக தூங்காமல் இருந்தால் அதனால் பல பிரச்சனைகள் உண்டாக கூடும். நல்ல தரமான தூக்கத்தை உண்டு செய்வதில் நாம் படுத்து உறங்கும் இடம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆம் படுக்கை, அறையின் வெப்பம், அறையில் உள்ள பொருட்கள் என அனைத்திற்கும் உங்கள் தூக்கத்தில் பங்கு உண்டு.

இன்று உங்கள் தூக்கத்திற்கும் காற்றாடிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பார்க்கலாம். நம்மில் பெரும்பாலானோர் காற்றாடியை ஓட விட்டு தான் தூங்குவோம். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

காற்றாடியை ஓட விட்டு தூங்குவதினால் கிடைக்கும் நன்மைகள்:

◆நடு இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காற்றாடி நின்று விட்டால் நமக்கு வழியும் வியர்வையை பார்த்து ஒரு கோபம் வரும் பாருங்கள்…. அப்படி ஒரு கோபம் வரும். எனவே காற்றாடி இல்லை என்றால் வியர்வையோடு நமக்கு தூக்கம் வராது. எனவே காற்றாடியை ஓட விட்டு தூங்கும் போது நமக்கு குளிர்ச்சியாகவும், சௌகரியமாகவும் இருக்கும்.

benefits and problems of sleeping with fan and without fan

◆ஒரு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு சடர்ன் இன்ஃபான்ட் டெத் சின்டுரோம் (Sudden Infant Death Syndrome- SIDS) அதாவது அதிகமாற வெப்பம் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு காரணமாக தூக்கத்திலே இறந்து போவது. இரவு நேரங்களில் காற்றாடியை ஓட விடுவதினால் இந்த பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

◆காற்றாடியை ஓட விடுவதினால் அறையில் காற்றோட்டம் அதிகரிக்கும். ஜன்னல் மற்றும் கதவுகள் மூடி இருந்தாலும் கூட அறையினுள் காற்றோட்டமாக இருக்கும். இதனால் சௌகரியமாக நீங்கள் தூங்குவீர்கள். ஆனால் அனைத்தையும் அடைத்து விட்டு தூங்குவது அவ்வளவு நல்லது அல்ல.

காற்றாடியை ஓட விட்டு தூங்குவதினால் கிடைக்கும் தீமைகள்:

◆எப்போதும் காற்றாடியை ஓட விடும் போது நம் சருமம் மற்றும் கண்களில் வறட்சி உண்டாகும். அதிலும் பாதி கண்களை திறந்தபடி தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

◆காற்றாடியை அதிக வேகமாக ஓட விடும் போது மூக்கு மற்றும் தொண்டை வறண்டு அதிகப்படியான சளி உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது. இதனால் மூக்கடைப்பு, தலைவலி, சைனஸ் போன்ற கோளாறுகள் ஏற்படும்.

◆காற்றாடி ஓடுவதினால் அறைக்குள் சுழலும் அழுக்கு, தூசி, போலன் போன்றவைகளை நீங்கள் சுவாசிக்கும் போது  உங்களுக்கு அழற்சியை ஏற்படுத்த கூடும். இதனால் அதிகப்படியான தும்மல், மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல், தொண்டை அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை உண்டாகும்.

◆காற்றாடிக்கு மிக அருகில் நீங்கள் படுத்து உறங்கும் போது அதிலிருந்து வருகின்ற குளிர்ந்த காற்று  தசைகளில் ஏற்கனவே வலி உள்ளவர்களுக்கு அதனை தீவிரப்படுத்தும்.

Leave a Reply