இரவில் அந்த இடத்தில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

9 July 2021, 10:15 am
Benefits Of Applying Oil Near Belly Button
Quick Share

நம் உடலின் மையப்பகுதி தொப்புள் தான். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இந்த தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? 

சிறு வயதில் எல்லாம் சாப்பிட்ட உணவில் முடி இருந்து வயிற்றில் சுற்றி கொண்டால் திருநீர் போட்டுஆள்காட்டி விரல் கொண்டு சுற்றி விடுவார்கள். காலைக்குள் வயிறு வலி பிரச்சினை இருந்தால் நன்றாகிவிடும். அதே போல தான் இந்த எண்ணெய் வைத்தியமும். இதற்கு நிறைய பலன்கள் உண்டு. அவை என்னென்ன, என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

இந்த தொப்புள் உடலின் மையப்பகுதி என்பதால், எண்ணெய் வைக்கும் போது தொப்புள் உடன் இணைந்துள்ள நரம்பு மண்டலங்களில் குறைபாடுகள் இருந்தால் அவை சரிசெய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும்.

இந்த எண்ணெய் வைத்திய மிகவும் நல்ல பலன் தரக்கூடியது என்றும், இந்த முறை குறித்து  நம் பாரம்பரிய வேதங்கள் மற்றும் ஆயுர்வேதத்திலும் சொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வேப்ப எண்ணெய், தேயிலை மர எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தொப்புளில்  மசாஜ் செய்து வந்தால் உடலின் சூடு தணிவதோடு உடலில் உள்ள நச்சுக்களை எல்லாம் வெளியேறும். கதிரியக்க சேதங்கள் ஏதும் இல்லாமல் சருமமம் பொலிவு பெறும்.

குறிப்பாக பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் தொப்புளைச் சுற்றி தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு மெதுவாக மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். அது மட்டுமில்லாமல் இந்த சமயத்தில் உடலில் ஏற்படும் பல்வேறு சொல்லமுடியா பிரச்சினைகளுக்கும் தீர்வுக் கிடைக்கும்.

இந்த எண்ணெய் வைத்தியத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும். இரவு தூங்க செல்வதற்கு முன் இப்படி செய்வதால் உங்களுக்கு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

இந்த பாரம்பரிய மசாஜ் முறையினால் கண் பார்வை மேம்படுவதாகவும், நாள் முழுக்க அதிகம் வெளிச்சம் உள்ள திரைகளையே பார்ப்பவர்களுக்கு கண் ஆரோக்கியம் மேம்படுவதாகவும், கண் வலி, கண் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமடைவதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் தொப்புளில் எண்ணெய் வைக்கும் கையேடு உச்சந்தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு படுத்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்யும் போது உடலின் மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் வலி குறையும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 344

0

0