உடற்பயிற்சி செய்யும் முன்பு இத பண்ண மறக்காதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
15 October 2022, 12:20 pm

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி அல்லது யாரேனும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்க நினைப்பவராக இருந்தாலும் சரி, நீங்கள் வொர்க்அவுட்டைத் தொடங்கும் முன் அல்லது விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு வார்ம் அப் செய்வது பல விதங்களில் நன்மை பயக்கும். வார்ம்-அப் பயிற்சிகள் பல வகைப்படும். அவை செயலற்ற அல்லது சுறுசுறுப்பான, மென்மையான அல்லது கடினமானதாக இருக்கலாம். அதிக ஆற்றலுடன் செயல்படவும், காயத்தைத் தவிர்க்கவும் வார்ம்அப் உங்களுக்கு உதவும். ஆனால் இதற்கு அறிவியல் சார்ந்த நிரூபணங்கள் குறைவாகவே உள்ளது. வார்ம்-அப் பயிற்சிகளின் நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சிலவற்றை இப்போது பார்ப்போம்.

வார்ம்அப்கள் எவ்வாறு உதவக்கூடும்?
நீங்கள் வார்ம்அப் செய்ய ஆரம்பித்தவுடன், உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அவையாவன:

*உங்கள் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது
*சிறிய நுண்குழாய்கள் உட்பட இரத்த நாளங்கள் திறக்கப்படுகின்றன *தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
*உங்கள் வொர்க்அவுட்டிற்கு தேவையான அதிக ஆக்ஸிஜனை இரத்தம் வெளியிடுகிறது
*உங்கள் தசைகள் வெப்பமடைவதால் அவை எளிதாக சுருங்குகின்றன
*உங்கள் மூட்டுகள் தளர்கின்றன
*உங்கள் மூளை உடலுடன் தொடர்பு கொள்கிறது
*உங்கள் இதயத் துடிப்பு மெதுவாக அதிகரிக்கும் என்பதால், வார்ம்அப்கள் உடற்பயிற்சியை உங்கள் இதயத்திற்கு குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

வார்ம்அப் செய்ய, பின்வரும் டிப்ஸ் உங்களுக்கு உதவும்:

*உங்கள் விளையாட்டு, வொர்க்அவுட் அல்லது பிற செயல்பாடுகளுக்கு முன்பே உங்கள் வார்ம்அப்பைத் தொடங்கவும்.
*கால்கள் போன்ற பெரிய தசைகள் இருக்கும் இடங்களில் கவனம் செலுத்துங்கள்.
*மெதுவாகத் தொடங்கி, வேகத்தை மெதுவாக அதிகரிக்கவும்
*உங்களுக்கு வியர்க்கும் வரை ஆனால் சோர்வடையாத வரை உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!