ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்தால் தினமும் செய்வீங்க! மிஸ் பண்ணவே மாட்டீங்க!
10 September 2020, 9:59 amபொதுவாக, உடற்பயிற்சி செய்வது நம் உடலை ஆரோக்கியம் ஆகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த லாக்டவுன் சமயத்தில் தொற்று பரவும் என்பதால் ஜிம்முக்கு போக முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இந்த ஸ்கிப்பிங் செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்:
இருதய உடற்பயிற்சி:
பல விளையாட்டு வீரர்கள் ஸ்கிப்பிங் செய்வதை நாம் பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது மற்றும் இதயத் துடிப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உள்ளது.
எடை இழப்பு:
ஒரு மணி நேரத்திற்கு ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 1,600 கலோரிகளை எரிக்கலாம். வெறும் 10 நிமிடங்களுக்கு ரோப் ஸ்கிப்பிங் செய்வது கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடுவதற்கு சமம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
முழு உடல் பயிற்சி:
நீங்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் அங்கு ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும். இந்த ஸ்கிப்பிங் செய்யும் போது உங்கள் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் இயக்கத்தில் இருக்கும்.
ஒருங்கிணைப்பு:
தவறாமல் ஸ்கிப்பிங் பயிற்சிகளைச் செய்வது நம் கைக்கும்-கண்ணுக்கும் ஆன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்.
ஸ்டாமினா:
வழக்கமாக ஸ்கிப்பிங் செய்வது உங்கள் ஸ்திரத்தன்மையையும்
ஸ்டாமினாவையும் அதிகரிக்கும். இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்கும்.
எலும்பு வலிமை:
ஸ்கிப்பிங் எலும்பு வலிமையை அதிகரிக்கும், மேலும் இது எடை தாங்கும் உடற்பயிற்சி என்பதால் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. ஆகையால், இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தசை வலிமை:
வழக்கமாக ஸ்கிப்பிங் செய்யும் போது தசைகள் திடமானதாகவும் ஒரு நெகிழ்வான மற்றும் சுறுசுறுப்பானதாக ஆக்குகிறது.
சருமத்தை மேம்படுத்துகிறது:
ஸ்கிப்பிங் உடற்பயிற்சியை சருமத்தில் ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நுரையீரல் செயல்பாடுகள் மேம்படுகிறது:
ஸ்கிப்பிங் நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது. நீண்ட கால ஏரோபிக் பயிற்சிகள் இருதய செயல்பாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் மற்றும் அதிகபட்ச ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
மன ஆரோக்கியத்திற்கு நல்லது:
ஸ்கிப்பிங் செய்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் கவலை மற்றும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. இதனால் அறிவாற்றல் மேம்படும்.
இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த ஸ்கிப்பிங் உடற்பயிற்சியை இனிமேலுமா செய்யாமல் இருக்கப்போகிறீர்கள்?
0
0