ஆடை எதுவும் இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

26 September 2020, 4:07 pm
Benefits Of Sleeping Naked
Quick Share

நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் ஆடைகளை அகற்றுவது கவர்ச்சியான விஷயமாக தோன்றலாம், ஆனால் அவ்வாறு செய்வது உங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு சம்பந்தம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நிர்வாணமாக தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, மேலும் இது சில ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது. பல ஆய்வுகள், தூக்கத்தின் போது ஆடைகள் இல்லாமல் தூங்குவது உண்மையில் சிறந்த தூக்கத்தை வழங்கும் என்று கூறுகின்றன.

நிர்வாணமாக தூங்குவது அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது, இது உங்கள் தூக்கத்தின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 8% பேர் மட்டுமே நிர்வாணமாக தூங்குவதால், பெரும்பாலானவர்கள் நிர்வாணமாக தூங்குவதன் நன்மைகளை தெரியாமல் இருக்கிறார்கள். போர்வைக்குள் புகுவதற்கு முன்பு நீங்கள் ஆடைகளை அகற்ற வேண்டியதற்கான அனைத்து காரணங்களையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இது உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்தும்

தோலோடு தோல் தொடர்பு கொள்ளும்போது காதல் ஹார்மோன் ஆன ஆக்ஸிடாஸின் வெளியாகிறது, இது இணைப்பு மற்றும் உணர்ச்சி நெருக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கிறது.

ஒரு பெட்ஷீட் நிறுவனத்தால் 1,000 பேரிடம் நடத்திய ஆய்வில், நிர்வாணமாக தூங்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒப்பிடும்போது ஆடைகளுடன் உறங்கும் தூங்கும்48 சதவீதம் பேரை விட, நிர்வாணமாக தூங்குபவர்களில் 57 சதவீதம் பேர் தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். 

இளமையுடன் இருக்க உதவும்

நிர்வாணமாக தூங்குவது உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்கிறது, இது மெலடோனின் மற்றும் வளர்ச்சி ஹார்மோனின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இந்த இரண்டு முக்கிய வயதாகுதல் எதிர்ப்பு ஹார்மோன்கள் உங்களை இளமையாக வைத்திருக்கவும், உங்கள் முடி நன்றாக வளரவும் உதவும் .

இந்த ஹார்மோன்களின் “மீளுருவாக்க மந்திரம்” உங்கள் சருமத்தை இளமையாகவும், முடியை கருகருவெனவும் வைத்திருக்கிறது.

ஆழ்ந்த தூக்கம்கிடைக்கும் 

நிர்வாணமாக தூங்கும்போது உங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை ஆழ்ந்த தூக்கம். ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பது முக்கியம். நிர்வாணமாக தூங்குவதன் முக்கியமான நன்மை என்னவென்றால், உங்கள் உடல் விரைவாக குளிர்விப்பது எளிதாகிறது, மேலும் உங்கள் மூளை உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். இதனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

இது மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தம் என்பது உங்கள் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் சீர்குழைக்க ஒரு விஷயம். நீண்டகால மன அழுத்தம் மிகவும் ஆபத்தானதும் கூட. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் மற்றும் இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் உடல் பருமன் போன்ற  பிரச்சினைகளையும் அதிகரிக்கிறது.

இது உங்கள் அறிவாற்றல் செயல்திறனையும் குறைக்கக்கூடியது. நிர்வாணமாக தூங்குவது உங்களுக்கு சிறந்த தூக்கத்தை கொடுக்கும், இதனால் உங்கள் சாதாரண கார்டிசோல் அளவை மீட்டெடுக்கும், இது உங்கள் மன அழுத்தத்தைப் போக்கும்.

Views: - 38

0

0