யூஸ் பண்ண டீ பேக்குகளை யூஸ்ஃபுல்லா மாற்ற சில டிப்ஸ்

Author: Hemalatha Ramkumar
1 January 2025, 11:17 am

இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய தேநீர் தினமும் மில்லியன் கணக்கான நபர்கள் பருகக் கூடிய ஒரு பானமாக அமைகிறது. மசாலா டீ, பிளாக் டீ அல்லது கிரீன் டீ என்று இது பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. பலருடைய நாள் இந்த பானத்தோடு தான் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக தேநீரை இன்னும் பல்வேறு விதமான விஷயங்களுக்கு நாம் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக அழகு வழக்கத்தில் தேநீர் ஒரு சிறந்த பொருளாக அமைகிறது. சருமத்தில் உள்ள எரிச்சல்களை ஆற்றுவது முதல் ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிப்பது வரை தேநீர் எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது.

ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்த தேநீர் ஒருவருடைய அழகு பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஒரு சிறந்த பொருள் உங்களுடைய சருமத்தையும் தலைமுடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு தேநீரை பயன்படுத்துவதற்கான ஒரு சில வழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீக்கத்தை குறைக்கிறது

கண்களைச் சுற்றி ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைப்பதற்கு நீங்கள் ஊறவைத்த டீ பேக்குகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் ரத்த நாளங்களை சுருங்க செய்து, வீக்கத்தை குறைக்கிறது. இதற்கு நீங்கள் குளிரூட்டப்பட்ட டீ பேக்குகளை பயன்படுத்த வேண்டும். கண்களை மூடி அவற்றின் மீது டீ பேக்குகளை வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்து வர அதன் பலன்களை பெறலாம்.

ஃபேஸ் மாஸ்குகள் 

கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகளுக்காக அது ஒரு சிறந்த ஃபேஸ் மாஸ்க் பேஸ் ஆக அமைகிறது. போஷாக்கு நிறைந்த பேஸ் மாஸ்கை தயார் செய்வதற்கு கிரீன் டீயுடன் தேன் மற்றும் தயிர் கலந்து பயன்படுத்தலாம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஆற்றி, அதனை பளபளக்கச் செய்து தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது.

தலை முடியை அலசுவதற்கு 

டீயில் உள்ள பண்புகள் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆற வைத்த கிரீன் டீ அல்லது பிளாக் டீயை ஷாம்பு பயன்படுத்திய பிறகு உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் பொடுகு பிரச்சனையைப் போக்கி, மயிர்க்கால்களை வலுப்பெறச் செய்து பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை தருவதற்கு உதவுகிறது.

சன்பர்ன் 

ஈரமான டீ பேக்குகளை சன்பர்ன் கொண்ட தோலில் பயன்படுத்துவதன் மூலமாக உடனடி நிவாரணம் பெறலாம். டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் வீக்கத்தை குறைத்து, வலியை போக்கி, குணப்படுத்தும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. டீயில் உள்ள ஆற்றும் பண்புகள் சன்பர்ன் உள்ள பகுதியை அமைதிப்படுத்தி அதில் உள்ள எரிச்சலையும், அசௌகரியத்தையும் போக்குகிறது.

இதையும் படிக்கலாமே:  கொடுத்தா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் போல…உடைத்த சம்பா கோதுமை கேசரி…!!!

முகத்திற்கான டோனர்

பயன்படுத்தப்பட்ட டீ பேக்குகளை உங்களுடைய முகத்திற்கு டோனராக நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு டீ பேக்கை கொதிக்கும் தண்ணீரில் வைத்து அது ஆறியவுடன் அதனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் சருமத்தின் pH அளவை சமநிலையாக்கி, சரும துளைகளை இறுக்கி, வீக்கத்தை குறைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!