பாரம்பரிய நெல்: தாய்ப்பால் சுரக்க செய்யும் காலா நமக் அரிசி!!!

4 February 2021, 10:47 pm
Quick Share

அரிசி அதிகமாக சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்ற இந்த சமயத்தில் நாம் தினம் ஒரு பாரம்பரிய அரிசி என்ற முறையில் அதன் பயன்கள் மற்றும் தனித்துவம் குறித்து பார்த்து வருகிறோம். நம் முன்னோர்கள்  பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பயன்கள் உள்ளது. 

அதைப்பற்றி தெரிந்தால் நிச்சயமாக நீங்கள் அரிசி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் அரிசி காலா நமக் என்ற பாரம்பரிய அரிசி தான். பெயரே வித்தியாசமாக உள்ளது அல்லவா…? இப்போது இந்த அரிசிக்கு காலா நமக் என்ற பெயர் ஏன் கிடைத்தது என்ற விவரத்தை பற்றி முதலில் பார்க்கலாம். 

பெயர் காரணம்:

இந்த பாரம்பரிய அரிசி வட மொழியில் ‘காலா நமக்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. ‘காலா’ என்றால் கருப்பு. இந்த அரிசியின் உமி கருப்பு நிறத்தில் காணப்படுவதால் இதற்கு ‘காலா நமக்’ என்ற பெயர் கிடைத்துள்ளது. 

தனித்துவம்:

இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் நறுமணம் கொண்ட நெல் வகைகளில் இது ஒன்று. புத்தர் வாழ்ந்த காலமான கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த அரிசி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக  இயற்கை உணவுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை

1. சாத்வீகம் (Sathvik)

2. சக்தி விரைய உணவுகள்

3. சக்தி விரயம் ஆகாத உணவுகள்

நாம் இன்று பார்த்து கொண்டிருக்கும் காலா நமக் அரிசியானது சாத்வீக குணத்தை கொண்டது. உலகம் முழுவதும் உள்ள புத்தபிட்சுகள் காலா நமக் அரிசியால் ஆன உணவையே சாப்பிட்டு வாழ்கின்றனர். 

காலா நமக் அரிசியின் பயன்கள்:

*கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற உணவாக இந்த காலா நமக் அரிசி அமைகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் தரக்கூடிய ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலா நமக் அரிசியை சாப்பிடுவது நல்லது. 

*பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ வைத்து சாப்பிட்டால்  தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

*சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். 

*தோல் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை காலா நமக் அரிசிக்கு உண்டு. 

*இரத்தப் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கிறது காலா நமக் அரிசி. 

*இந்த அரிசி நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. 

Views: - 0

0

0