கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தாய்மார்கள் பால் கொடுக்கலாமா? கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

Author: Dhivagar
3 August 2021, 12:26 pm
can feeding mother take covid vaccine in india
Quick Share

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுகொண்டால் கொரோனா வரவே வராது என்று சிலர் எண்ணிக்கொண்டு மிகவும் அஜாக்கிரதையாக இருக்கின்றனர். இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை உங்களுக்காக இங்கே பதிவிட்டுளோம். படித்து நீங்களும் அறிந்துக்கொண்டு உங்கள் உற்றார் உறவினர்களுக்கும் பகிர்ந்து பயனடையுங்கள். 

பாதுகாப்பு அவசியம்:

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், முகக் கவசம் அணிவது, தொடர்ந்து கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

வலி குறைய:

தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்தில் உங்களுக்கு வலி இருந்தால் அதை குறைக்க கைக்கு மேல் ஒரு சுத்தமான, குளிர்ந்த மற்றும் ஈரமான துணியை (அல்லது சிறிது ஐஸ்கட்டி) உடன் ஒத்தடம் கொடுக்கலாம். வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க லேசான உடற்பயிற்சி அல்லது லேசான நடைப்பயிற்சிகளை செய்யுங்கள். தடுப்பூசி போட்டதனால் உடலில் வலி இருக்கும்போது மேலும் மேலும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு உடலை வருத்திக்கொள்ளக்கூடாது.

தீவிரமான வலி இருந்தாலோ அல்லது வலி தொடர்ந்து இருந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கலாம்

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க வேண்டிய அவசியம்  இல்லை. தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். கோவிட் -19 தடுப்பூசி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் குழந்தைகளுக்கும் பால் வழியாக செல்லும் என்பதால் இது குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க ஏற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் WHO ஒப்புதல் அளித்தபடி, கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Views: - 424

0

1