கர்ப்பமாக இருக்கும் போது செவ்வாழைப்பழம் சாப்பிடலாமா… யார் இதனை எடுக்க கூடாது???

25 January 2021, 8:04 pm
Quick Share

கர்பமாக இருக்கும் பெண்கள் தினமும் தங்களது உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது நல்லது. ஆனால் இந்த சமயத்தில் எதை சாப்பிடுவது, எதை ஒதுக்குவது என்பது பற்றிய பல கேள்விகள் எழுகின்றன. பழங்களில் முதன்மையாக விளங்கும் செவ்வாழையை கர்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

★பசியை குறைக்கும்:

கர்பமாக இருக்கும் போது அடிக்கடி பசி எடுக்கும். ஆனால் முதல் மூன்று மாதங்களில் வாந்தி மற்றும் குமட்டலுக்கு பயந்து பாதி உணவை தவிர்த்து விடுவார்கள். ஆகவே மூன்று மாதங்களுக்கு பிறகு அவர்களுக்கு இயல்பாகவே பசி அதிகரிக்கும். இந்த சமயத்தில் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்த செவ்வாழை எடுக்கலாம். 

★குழந்தையின் எலும்பு உறுதியாக:

கால்சியம் நிறைந்த செவ்வாழைப்பழம் கர்ப காலத்தில் குழந்தைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை கொடுக்க வல்லது. இதன் மூலமாக குழந்தையின் எலும்பு வலுவடையும். 

★குழந்தையின் மூளை வளர்ச்சி:

கரு உருவான பிறகு இருக்கும் முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் மூளை மற்றும் முதுகு தண்டு உருவாகும். ஆனால் இந்த முதல் மூன்று மாதங்களில் தான் வாந்தி, குமட்டல், உடல் சோர்வு ஆகியவை அதிகமாக இருக்கும். இவற்றை எல்லாம் கடந்து நாம் எடுக்கும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குழந்தைக்கு மிகவும் அவசியம். செவ்வாழையில் உள்ள நீரில் கரையக்கூடிய வைட்டமின் மற்றும் ஃபோலிக் அமிலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரித்து அவர்களை புத்திசாலி குழந்தையாக உருவாக்க உதவுகிறது. 

★மலச்சிக்கல் நீங்கும்:

கர்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். செவ்வாழையில் உள்ள நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான மண்டலத்தை வலுவடைய செய்து மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் குடலில் சீரான இயக்கத்திற்கு வழிவகுக்கும். 

★ஹீமோகுளோபின் உயர:

மலச்சிக்கலுக்கு அடுத்தபடியாக இருக்கும் பிரச்சினை ஹீமோகுளோபின் குறைபாடு. இரும்பு சத்து குறைப்பாட்டால் இது உண்டாகிறது. இது தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் ஆபத்தானது. இத்தகைய இரத்த சோகை ஏற்படாமல் இருக்க கர்ப்பம் தரித்ததில் இருந்தே செவ்வாழைப்பழம் சாப்பிட துவங்குங்கள். 

★நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

செவ்வாழையில் அதிக  அளவில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நோய் தொற்றுகளிடமிருந்து காப்பாற்ற வல்லது. அது மட்டும் இல்லாமல் ஆன்டியாக்ஸிடன்டுகளும் இதில் நிறைந்து உள்ளது. 

சர்க்கரை நோய் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு:

செவ்வாழையை சாப்பிட்ட உடனே நமக்கு அதிகப்படியான ஆற்றல் கிடைக்கும். இதில் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளது. எனவே கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவோ அல்லது கர்பமாக இருக்கும் போதோ நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் செவ்வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

Views: - 0

0

0